ஊருக்கே வாழ்ந்த விஜயகாந்தின் தம்பி நிலை என்ன தெரியுமா? எப்படி இருக்கிறார் பாருங்க!

விஜயகாந்தின் தம்பி
விஜயகாந்தின் தம்பி

கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். ஊருக்கே விஜயகாந்த் செய்த நன்மையால் தான் அவர் இறப்பில் அத்தனை கூட்டமும் சேர்ந்தது என்றே சொல்லலாம். அப்படி இருக்கையில் அவர் குடும்பத்தில் ஒருவரான அவரது தம்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதி. அழகர்சாமி மதுரைக்கு வந்து கீரைத்துறை பகுதியில் ரைஸ் மில் தொழில் ஆரம்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மேலமாசி வீதியிலுள்ள சவுராஷ்டிரா சந்து பகுதியில் குடியேறியுள்ளார். அழகர்சாமி - ஆண்டாள் தம்பதிக்கு விஜயலட்சுமி, நாகராஜ் (இறந்துவிட்டார்) விஜயராஜ் (எ) கேப்டன் விஜய்காந்த், திருமலா தேவி ஆகியோரும், ஆண்டாள் இறந்த பிறகு அழகர்சாமி அவரது அக்காள் மகளான ருக்மணியை 2வது திருமணம் செய்துள்ளார். இவருக்கு செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராமராஜ் (இறந்துவிட்டார்) மீனாகுமாரி, சாந்தி, பிருதிவிராஜ் ஆகியோரும் உள்ளனர்.

விஜய்காந்த் உள்ளிட்ட அனைவரும் பெரும்பாலும் மதுரையில் பிறந்து வளர்ந்துள்ளனர். அழகர்சாமி தனது பிள்ளைகள் எப்போதும் ராஜாவாகவே இருக்க வேண்டும் என, கருதி எல்லா குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ராஜ் என்றும் பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தேவி என, முடியும் வகையிலும் பெயர் வைத்துள்ளார். அழகர்சாமி மதுரை கீறைத்துறையில் தொடங்கிய ரைமில் தொழில் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

தற்போது, ஆண்டாள், ருக்மணி என்ற பெயரில் இரு ரைஸ்மில் செயல்படுகிறது. இவற்றை குடும்பத்தினர் கவனிக்கின்றனர். மேலமாசி வீதியிலுள்ள பூர்வீக வீட்டில் விஜயகாந்த் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கிறார்.

இவர் மதுரையில் பிளாஸ்டிக் வியாபாரம் செய்துவருவதாக கூறப்படுகிறது. நடிகர், அரசியல்வாதி என்ற பன்முகத்தன்மை கொண்ட விஜயகாந்த் தனது அண்ணனாக இருந்தாலும் செல்வராஜ் ரொம்பவே எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துவந்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக விஜயகாந்த் அரசியலில் நுழைந்தாலும் அவரிடம் செல்வராஜ் பெரிதாக எதையும் எதிர்பார்க்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இப்போது ஏழ்மையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com