விஜயகுமாரின் பேத்தியின் திருமண விழா களைகட்டி வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் விஜயக்குமாருக்கு முத்துகண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என 2 மனைவிகள். முதல் மனைவியின் மகள்கள் தான் அனிதா, கவிதா மற்றும் மகன் அருண் விஜய். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் முட்டிக்கொள்ளவே, முதல் மனைவி சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சுளா மூலம் நடிகர் விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் பிறந்தனர். இதில் வனிதா விஜயக்குமார் மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்.
விஜயக்குமாரின் 2வது மகளான அனிதா விஜயக்குமார் ஒரு மருத்துவர் ஆவார். இவரின் மகள் தான் தியா. வெளிநாட்டில் செட்டில் ஆன இவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இந்த நிலையில் இவரது மகள் தியாவிற்கு இந்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. இவரின் திருமண விழா களைகட்டி வரும் நிலையில், நேற்று அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இதில் விஜயகுமார், கவிதா விஜயகுமார் அருண் விஜய், ப்ரீத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பங்கேற்றனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் மணப்பெண்ணான தியா பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில் “ அனைவரின் அன்புடனும் எங்கள் பந்தக்கால் மற்றும் சுமங்கலி பூஜை நிகழ்ச்சி உடன் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனக்கு மெஹந்தி போடும் வீடியோ, மேக்கப் போடும் வீடியோ, புடவை கட்டும் வீடியோவையும் தியா பகிர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.