மகாராஜா படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு..!

மகாராஜா
மகாராஜா
Updated on

நடிகர் விஜய்சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் தி ரூட் ஜெகதீஸ் மகாராஜாவை தயாரிக்கிறார்கள். 'குரங்கு பொம்மை' நிதிலன் இப்படத்தை இயக்குகிறார். நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அஜினீஷ் லோகேநாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தற்போது ஹாலிவுட் ரேஞ்சிற்கு உயர்ந்த விஜய்சேதுபதி கத்ரீனா கைப்புடன் மெரின்கிரிஸ்துமஸ் படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஜய்சேதுபதியின் அடுத்த பட அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மகாராஜா படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் விஜய் சேதுபதி கையில் அரிவாளுடன், ரத்தக் கறையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும் விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 2வது போஸ்டரும் ஹைப் கிளப்பியுள்ள நிலையில் மகாராஜா படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com