அப்பா மகள் அன்பை சொல்லும் 'மகாராஜா' பட முதல் பாடல்..!

Maharaja
Maharaja

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மகாராஜா படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா Maharaja.இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது இது தான் 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில், நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ட்ரைலரும் வெளியாகி ட்ரெண்டானது. குறிப்பாக அப்பாவி போல இருக்கும் விஜய் சேதுபதி கடைசி காட்சியில் கத்தியுடன் வருவது மற்றும் அனுராக் காஷ்யப் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு த்ரில்லிங் ஆக இருந்தது. அத்துடன் டிரைலரில் வரும் பின்னணி இசையும் துல்லியமாக இருப்பதாகவும் கருத்து வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் "தாயே தாயே" என்கின்ற முதல் சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் குரலில் ஒலித்துள்ள இந்த அருமையான பாடலை எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து. இந்த முதல் சிங்கிள் பாடலை வெளியிட்ட கவிப்பேரரசர் வைரமுத்து, விஜய் சேதுபதிக்காக ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விஜய்க்கு போட்டியாக வரும் சிவகார்த்திகேயன்? அமரன் ரிலீஸ் எப்போது?
Maharaja

விஜய் சேதுபதி, ஒரு தனிமைத் தந்தை.. உறவற்ற வெறுமை, மகளென்ற பந்தத்தால் நிறைந்து வழிகிறது. முடிதிருத்தும் தொழிலாளி அவர், ஆனால், உலகத்தின் பெரும்பணக்காரர்களுள் தானும் ஒருவன் என்று பெருமை பேசுகிறார். எப்படி? 'அன்பான மகள்வந்ததால் அம்பானி நானாகிறேன்’ நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில், சித் ஸ்ரீராம் குரலில், மஹாராஜா படத்தின் ஒரு தனிப்பாடல் இது. மூன்றுமுறை கேளுங்கள் முழுச்சாரம் இறங்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் நிறைய பாடல்களுக்கு மத்தியில் இந்த பாடலும் இடம்பெற்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com