விஜய்க்கு போட்டியாக வரும் சிவகார்த்திகேயன்? அமரன் ரிலீஸ் எப்போது?

GOAT - Amaran
GOAT - Amaran

நடிகர் விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயன் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் SK 21 படம் வெளிவர உள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து கட்டுமாஸ்தான் உடற்கட்டுக்கு மாறி நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் தான் நடத்தினர்.

அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அதன் பின்னணி பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அப்படத்தின் ரிலீஸ் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பின்னணி பணிகள் முடிய தாமதம் ஆவதால் அமரன் படத்தின் ரிலீஸை வருகிற செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நெருங்கும் வரலட்சுமி திருமணம்... ரஜினியை தொடர்ந்து முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் - ராதிகா!
GOAT - Amaran

செப்டம்பர் மாதம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கு போட்டியாக அமரன் படம் ரிலீஸ் ஆகுமா என்கிற பேச்சு எழுந்து வந்தது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், அம்மாத இறுதியில் அதாவது செப்டம்பர் 27-ந் தேதி தான் அமரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில் அவரின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் நிரப்புவார் என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் போட்டியால் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com