வணங்கானுக்கு போட்டியாக வரும் தங்கலான்... எப்போது தெரியுமா?

Vanangaan vs Thangalaan
Vanangaan vs Thangalaan

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்துடன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் பாலாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகவில்லை. இதனால் இந்த படம் பாலாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வர வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். தொடர்ந்து அருண் விஜய் இந்த படத்தில் கமிட் ஆனார்.

சினிமாவில் தொடரும் பாலா - விக்ரம் போட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் வந்துள்ளது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விக்ரம் தன் மகனை பாலாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டு, அவர் இயக்கத்தில் வர்மா என்கிற திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். வர்மா படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் படத்தை பார்த்த விக்ரமிற்கு சுத்தமாக திருப்தி இல்லாததால் அப்படத்தை அப்படியே கைவிட்டுவிட்டார். அதன் பின்னர் வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் அப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்டனர். வர்மா படத்தினால் விக்ரம் - பாலாவின் உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
2 நாட்கள் வீட்டில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்... திரையுலகினர் அதிர்ச்சி!
Vanangaan vs Thangalaan

அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து தயாராகி இருக்கும் வணங்கான் திரைப்படமும், பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள தங்கலான் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தான் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் போட்டிபோட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் ரிலீஸ் ஆக இருந்த பான் இந்தியா படமான புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால், வணங்கான் மற்றும் தங்கலான் படங்கள் ஆகஸ்ட் 15ந் தேதியை டார்கெட் செய்துள்ளனர். விரைவில் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com