பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயோபிக்கில் விஷால்… இது லிஸ்ட்லையே இல்லையேபா!

Vishal and Annamalai
Vishal and Annamalai

முன்னாள் ஐபிஎஸ் மற்றும் தற்போதைய பாஜக மாநில தலைவருமான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளதாகவும், அண்ணாமலையாக விஷால் நடிக்கவுள்ளார் என்ற செய்திகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிப்பது அதிகாரப்பூர்வமானது. இதனையடுத்து, ரஜினிகாந்த் பயோப்பிக்கின் ஸ்க்ரிப்ட் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என்ற செய்திகள் வந்தன. தற்போது மீண்டும் ஒரு பயோபிக் அறிவிப்பு வந்துள்ளது.

இப்போது பாஜக என்றால் அனைவருக்கும் மோடி ஞாபகம் வருகிறாரோ இல்லையோ, தமிழக மக்களுக்கு அண்ணாமலை ஞாபகம் வருகிறார். தினந்தோறும் அவருடைய செய்தி ஒன்றாவது வந்துவிடுகிறது. அந்தளவுக்கு பிரபலமான ஒரு அரசியல்வாதி, அண்ணாமலை.

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த 2020ம் ஆண்டு பணியை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தற்போது அதில் தனக்கான இடத்தையும் பிடித்து பலரது செல்வாக்கையும் பெற்றார். அப்படியிருக்க, அரசு ஊழியரிலிருந்து அரசியலில் வந்தது, அரசியலில் ஒரு இடத்தைப் பிடித்து தக்கவைத்துக் கொண்டது, மக்களுக்கு என்னவெல்லாம் செய்தார் போன்றவற்றின் அடிப்படையில், அவரது பயோபிக் உருவாகப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

அண்ணாமலை பயோபிக்கில், அவரது கதாப்பாத்திரத்தில் விஷால் நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன. உருவத்தில் கிட்டத்தட்ட அண்ணாமலை போலவே இருக்கும் விஷால், இதற்கு சரியான சாய்ஸ் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், விஷால் கிட்டத்தட்ட படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

விஷால் கடைசியாக நடித்த ரத்னம் படம்,  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறவில்லை என்றே கூற வேண்டும். சினிமா ஒருபுறம் இருக்க, விஷால் 2026ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கப்போவதாகவும் சொல்லி வந்தார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, மாணவர் ஒருவர், "ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலில் திகைத்த நடிகர் விஷால் சட்டென, "ஐபிஎஸ்" என பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய விஷால், "நான் வணங்கும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு சல்யூட்" என்றார்.

இதையும் படியுங்கள்:
குட் பேட் அக்லி படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்!
Vishal and Annamalai

மேலும், "என் நண்பன் பெயர் ஐ.பி.செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐபிஎஸ் தான்." எனத் தெரிவித்தார். விஷால் ஐபிஎஸ் என முதலில் சொன்னது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தா? அல்லது திமுக எம்.எல்.ஏ ஐபி.செந்தில் குமார் பற்றியா? என சமூக வலைதளத்தில் சூடான விவாதமே நடந்தது.

இதனையடுத்துத் தற்போது இந்த பயோபிக் செய்தி வந்தது, ரசிகர்கள் “அப்போ புரில, இப்போ புரிது” என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com