மார்க் ஆண்டனி வெற்றி.. நடிகர் விஷால் மகிழ்ச்சி!

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் விஷால் நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். பீரியட் மூவியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் டைம் டிராவல், ஆக்சன் த்ரில்லர், கேங்ஸ்டர் என பலவிதமான ஜேனரில் இருக்கும் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலரால் பலரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் விஷால், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வெற்றிக்கு உழைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வர்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாதவும் அடுத்த படத்தையும் நன்றாக தர முயற்சிப்பதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com