உடல் நலத்தை காட்டியும், நடந்து கொள்ளும் விதத்தை காட்டியும் இப்போது பல சர்ச்சைகள் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகினாலும், இன்றளவும் பல இளைஞர்களின் மனதில் ஒரு எழுச்சி ஹீரோவாக இருப்பவர்தான் புரட்சித் தளபதி விஷால் அவர்கள்.
அதிரடி சண்டை காட்சிகள், மிடுக்கான நடிப்பு, கனக்கச்சிதமான ஆட்டம் என்று ஒவ்வொரு படத்திற்கும் தன்னை செதுக்கி அர்ப்பணிப்போடு நடிப்பவர்தான் விஷால் அவர்கள். பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும், சண்டைக்கோழி, அவன் இவன், திமிரு, பூஜை, மருது, தாமிரபரணி போன்ற தரமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதிலும், பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பெற்றிருப்பவர்.
அதிலும் குறிப்பாக இளைஞர்களின் மனதில் எழுச்சி ஹீரோவாக இன்றும் அறியப்பட்டு வருகிறார். இப்போது சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக 2025- இல் பொங்கலுக்கு வெளியான, விஷால் மற்றும் சந்தானம், மனோபாலா போன்றோர் நடித்த “மதகஜராஜா” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல் விஷாலின் திரை பயணத்தில் முதல் 100 கோடியை தொட்ட திரைப்படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமான, மார்க் ஆண்டனி திரைப்படம் இருக்கிறது.
இப்போது விஷால் அவர்கள் நடிக்கும் 35 வது படத்திற்கான புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. இந்த அப்டேட்டால் விஷாலின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதேபோல் படத்திற்கும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஷால் 35 படத்திற்கான டைட்டில் டீசர் வெளியானது.
படத்தின் டைட்டில் டீசரானது, கடல் மற்றும் அதயொட்டிய துறைமுகம், கப்பல் கட்டுமானம் போன்ற இடங்களை மையமாகக் கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஆர்.பி. சவுத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 99 ஆவது தயாரிப்பாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
ஐங்கரன் மற்றும் ஈட்டி போன்ற இரண்டு படங்களை இயக்கிய ரவி அரசு அவர்களின் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் அவர்களின் இசையில் உருவாகி வரும் விஷால் 35வது திரைப் படத்தின் தலைப்பானது மகுடம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயனும் நடிக்கிறார் என்பதும் தெரியவருகிறது. அதேபோல் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ட்ரெய்லரும் படத்தின் வெளியிட்டு தேதியும் பிறகு அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.