vishal
vishal

விஷாலின் லத்தி சார்ஜ்!

Published on

விஷால், சுனைனா நடித்து வினோத்குமார் இயக்கியுள்ள படம் லத்தி சார்ஜ். இந்த படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவின் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற டி ஜி பி ஜாங்கிட் கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஜாங்கிட் "காவல் துறையில் மிக உயர்ந்த பதவி டி ஜி பி. கடைசி நிலையில் இருக்கும் பதவி கான்ஸ்டபிள். சினிமா ஹீரோக்கள் உயர் பதவியில் இருக்கும் கேரக்டரில் நடிக்க ஆசை ப் படுவார்கள்.குறைந்தபட்சம் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் கான்ஸ்டபிள் ரோலில் நடிக்க விரும்ப மாட்டார்கள்.

முதல் முறையாக விஷால் துணிந்து நடித்துள்ளார் பாராட்டுகிறேன். பொதுமக்களிடம் காவல் துறைக்கு கிடைக்கும் பெருமைக்கும், சிறுமைக்கும் கான்ஸ்டபில் களின் பங்கு முக்கியமானது.உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்கள் இவர்கள்.விஷால் இந்த கான்ஸ்டபிள் கதா பாத்திரத்தில் நடிப்பது இவர்களை பெருமை சேர்ப்பது போல் உள்ளது" என்றார்."

லத்தி சார்ஜ் நிஜமாகவே எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லி ஜாங்கிட்டிற்கு ஒரு சல்யூட் வைத்தார். விஷால்.மேலும் லோகேஷ் கனகராஜ் இங்கே வந்துள்ளார்.தளபதி விஜய் படத்தின் டைரக்டர். நானும் தளபதியை வைத்து படம் இயக்க ஆவலாக உள்ளேன் என்றார் விஷால்.

விஷாலின் நெருங்கிய நண்பர்களும், நடிகர்களுமான ரமணா மற்றும் நந்தா நடிக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசை அமைத்துள்ளார்.விஷால் சுழற்றும் லத்தியை காண சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும்

logo
Kalki Online
kalkionline.com