ரசிகர்களை நடுங்க வைத்த ‘ராட்சசன் 2’ அப்டேட்: ரிலீஸ் எப்போது தெரியுமா?

ராட்சசன்
ராட்சசன்

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் ராட்சசன் 2 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் 2018ம் ஆண்டு இயக்கிய படம் ராட்சசன். விஷ்ணு விஷால் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராம்குமார்.

திரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களின் முழு கவனத்தையும் பெற்றது. சைகோ திரில்லர் கதையாக உருவான இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பெரிய வரவேற்புள்ளது. படம் ரிலீஸாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும், அந்தப் படத்தின் மீதான மவுசு குறைந்ததாக இல்லை. கதை, மியூசிக், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார்கள் ராட்சசன் படக்குழுவினர்.

இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன்தான் பார்ப்பார்கள். முதல் பாகம் முடிவிலேயே இரண்டாம் பாகம் வரும் என சொல்லித்தான் படத்தை முடித்திருப்பார்கள். இதனால் இதன் 2ம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ராட்சசன் வெற்றியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
ஹீரோவான விஜய் சேதுபதியின் மகன்: ‘பீனிக்ஸ்’ பட டீசர் வெளியீடு!
ராட்சசன்

இந்தப் படம் Fantasy கதைக்களத்தில் உருவாகி வருகிறது என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், இது ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தானாம். ராட்சசன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது என பேசப்படுகிறது.

இந்தத் தகவல், ராட்சசன் 2 திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com