வாரிசு டிக்கெட் இலவசமாக வேண்டுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க!

காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம்
வாரிசு டிக்கெட் இலவசமாக வேண்டுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிய வாரிசு படம் நாளை புதன் கிழமை (11 ஆம் தேதி) அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா , சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, எஸ்.ஜே.சூர்யா முதலானோர் நடத்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் நாளை ரத்ததானம் செய்பவர்களுக்கு வாரிசு பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருவதால் நாளை ரத்த தானம் கொடுக்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் நாளை அதிகபடியான திரையரங்குகளில் வாரிசு படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com