கேஜிஎஃப் 3ல் நாங்கள் நடித்திருக்கிறோம் – மாளவிகா!

KGF cast
KGF cast
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

கேஜிஎஃப் 3 படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில், தற்போது அப்படத்தில் நடித்த மாளவிகா அவினாஷ் ஒரு நேர்காணலில் இப்படம் குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார்.

பிரசாந்த் நீல் 2014ம் ஆண்டு கன்னடாவில் 'உக்ரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் மூலம் பான் இந்தியா இயக்குனராக உருமாறினார். நீல் தனது இரண்டாவது படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்ததால் பல கதாநாயகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நீல் மீண்டும் 2022ம் ஆண்டு யாஷ் வைத்தே கேஜிஎஃப் பாகம் 2 படத்தை இயக்கினார். இவருடைய இந்தப் படமும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதனையடுத்து பிரசாந்த் நீல் பிரபாஸுடன் கைக்கோர்க்கிறார் என்ற செய்தி பரவியதையடுத்து ரசிகர்கள் ஒரு ப்ளாக்பஸ்டரை நோக்கிக் காத்துக்கொண்டிருந்தனர்.

அந்தவகையில் சென்ற ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிரபாஸ் நடிப்பில் நீல் இயக்கத்தில் 'சலார்' படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் 3 படத்தை நோக்கிதான் இந்திய ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், சமீபக்காலமாக கேஜிஎஃப் குறித்தான எந்த தகவலும் சினிமா வட்டாரத்திலிருந்து வெளிவரவில்லை. அந்தவகையில், கேஜிஎஃப் 1 மற்றும் 2ம் பாகங்களில் நடித்த மாளவிகா கேஜிஎஃப் 3 குறித்துப் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
தாத்தா வராரு... பாடல் வீடியோ வெளியீடு... வைப் செய்யும் ரசிகர்கள்!
KGF cast

ராக்கி திரும்பி வருவாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாளவிகா “வரனும்னுதான் எனக்கும் ஆசை. Acutally நானும் பிரகாஷ் ராஜும் நடிச்சோம். ஒரு ரெண்டு நாள் மட்டும் கொஞ்சம் நடிச்சோம். ஆனால் எப்போ அத continue பண்ணுவாங்கன்னு தெரில. கேஜிஎஃப் 3 இருக்குனுதான் நினைக்கிறேன். ஆனால், நானும் அந்த தகவலுக்கு எதிர்பார்த்துதான் இருக்கேன்.” என்று பேசினார்.

படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பதால், ஒருவேளை நானும் எதிர்பார்த்துதான் இருக்கிறேன் என்று முடித்திருக்கிறாரோ? என்னவோ?

அதான் இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்ததே…

logo
Kalki Online
kalkionline.com