அஜித்தின் தீண்டாமை விவகாரம் சில நாட்கள் முன்னர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தனது தனித்துவமான உடல்மொழிக்காகவும், வசன உச்சரிப்புக்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரது காட்சிகள் கலகலப்பிற்கு உத்தரவாதம். சமீபத்தில், ஒரு நேர்காணலில், நடிகர் அஜித்குமார் குறித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில காலத்திற்கு முன்னர் வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜித், யோகி பாபுவை தன்னை தொடக்கூடாது என்று கூறியதாகவும், இதனை யோகி பாபுவே தங்களிடம் சொன்னதாகவும் பிஸ்மி கூறியிருந்தார். அந்த சமயத்தில் இந்த தகவல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், இதுகுறித்து யோகிபாபு வாய் திறக்கவில்லை. இப்படியான நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து யோகிபாபுவிடம் கேட்கப்பட்டது. அதாவது ஏற்கனவே அஜித்துக்கும் உங்களுக்கும் சிறிய பிரச்சனை இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் குட் பேட் அக்லி படத்தின் போது நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த யோகி பாபு, “அதலாம் சும்மா! நானும் அவரும் வீரம் படத்திலிருந்து ஒன்றாக நடிக்கிறோம். அதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். அவர் நம்மை கட்டிப்பிடித்து அவருடைய மூச்சு நம் மூச்சுடன் சேரும். அந்த அளவிற்கு அன்பை காட்டுபவர் தான் அஜித் சார். மற்றவை எல்லாம் சும்மா” என்று தெரிவித்துள்ளார்.
அஜித் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த திரைப்படங்கள், அவர்களின் திரைப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த சம்பவம், அவர்கள் இருவருக்கும் இடையிலான ஆரோக்கியமான நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.
அப்போது இந்த சர்ச்சை எழும்போதே ரசிகர்கள் நம்பவில்லை. தற்போது இது உறுதியானதும் அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம்தான்.