நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ், தற்போது இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது .
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது திரைப்படம் 'இட்லி கடை'. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், "இட்லி கடை" படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மொத்தப் பாடல்களும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
குறிப்பாக செப்டம்பர் 13 ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறபோவதாக செய்திகள் வந்துள்ளன.
சமீபத்தில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், முழு ஆல்பமும் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தி ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் எழுதி பாடிய ஒரு காதல் பாடலும், ஜி.வி. பிரகாஷின் துடிப்பான இசையும் இந்த படத்திற்குப் பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஒரு காதல் பாடலும், படக்குழுவினர் வெளியிட்டு வரும் அப்டேட்களும் படத்தின் விளம்பரத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளன. மொத்தத்தில், "இட்லி கடை" திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வரும் என உறுதியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடியோ லாஞ்சில் தனுஷ் என்ன பேசபோகிறார் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது. குறிப்பாக மீம் க்ரியேட்டர்ஸ்தான் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்காங்கப்பா…