தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கிங்' யார்?

Kollywood King
Tamil Directors
Published on

எத்தனையோ இயக்குநர்களை இதுநாள் வரை தமிழ் சினிமா கண்டுள்ளது. இதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் தனித்தனி சிறப்புகள் இருக்கும். ரசிகர்கள் விரும்பும் படியான படங்களை இயக்குநர்கள் அவர்களது ஸ்டைலில் எடுப்பார்கள். ஆனால் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இருப்பினும் கமர்ஷியல் படங்களை எடுப்பது தான் மிகவும் கடினம் என பல இயக்குநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு அதிக கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள பிரபல இயக்குநர் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

நிஜ வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் பொதுமக்கள் பலரும், பொழுதுபோக்கிற்காக திரைப்படங்களைத் தேடி வருகின்றனர். இப்படியான மக்கள் பெரும்பாலும் கதையே இல்லையென்றாலும், நகைச்சுவை நிறைந்த கமர்ஷியல் படங்களைத் தான் அதிகமாக விரும்புவார்கள். அதற்கேற்ப, தமிழ் சினிமாவில் வெளிவந்த பல கமர்ஷியல் படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக கமர்ஷியல் படங்களைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இவர் தொடக்கத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சினிமாவில் பலவற்றைக் கற்றுக் கொண்டு, 'முறை மாமன்' என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதன்பிறகு அருண் விஜய்யின் முதல் படமான 'முறை மாப்பிள்ளை' படத்தையும் இயக்கினார்.

சிறிது கால இடைவெளிக்குப் பிறகு 'தலைநகரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார் சுந்தர் சி. என்ன தான் இயக்குநராக இருந்தாலும் இவரது நடிப்பில் வெளியான 'வீராப்பு', 'சண்டை' மற்றும் 'அரண்மனை' போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகரைக் காட்டிலும் இயக்குநராக சுந்தர் சி நிச்சயம் தமிழ் சினிமாவில் வெற்றியாளர் தான். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், ரிஷி, கிரி, வின்னர், கலகலப்பு, உள்ளம் கொள்ளை போகுதே மற்றும் உன்னைத் தேடி போன்ற பல படங்கள் இவரது இயக்கத்தில் முத்திரை பதித்தன.

சுந்தர் சி இயக்கிய படங்களில் சாதி ரீதியிலான மோதல்கள் இருக்காது; கருத்து சொல்கிறேன் என ரசிகர்களை வெறுப்பேற்றியது கிடையாது; அருவருப்பான எந்தக் காட்சிகளையும் எடுத்தது கிடையாது; கிளைமாக்ஸில் மனதை வருத்தும் காட்சிகள் ஏதும் கிடையாது. படம் பார்க்க தியேட்டருக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக இருப்பதற்காக மட்டுமே படம் எடுப்பவர் சுந்தர் சி.

Commercial King
Sundar C
இதையும் படியுங்கள்:
சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்ட மாஸ் ஹீரோ: மனம் திறந்த தீபக்!
Kollywood King

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களுக்கு ஒவ்வொரு படத்திலும் காமெடி விருந்தை பரிசளிப்பார். இவர் இயக்கிய பல படங்கள் நல்ல இலாபத்தை ஈட்டித் தந்துள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் கூட நல்ல கமர்ஷியல் வெற்றியைப் பதிவு செய்தது.

இன்று பல இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். ஆனால் குடும்பத்துடன் படம் பார்க்க செல்பவர்கள் கமர்ஷியல் படங்களையே அதிகம் விரும்புகின்றனர். அவ்வகையில் பல திரைப்படங்களை கமர்ஷியல் வெற்றியாக கொடுத்த இயக்குநர் சுந்தர் சி, 'தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்' என்பதில் துளியும் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com