பிரபல இந்தி நடிகருடன் உலா வரும் தமிழ் தொகுப்பாளின்.. யார் இந்த லேகா வாஷிங்டன்?

Lekha Washington
Lekha Washingtonakm-img-a-in.tosshub.com
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

டிகை மற்றும் தொகுப்பாளரான லேகா வாஷிங்டன் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமிர் கான் மகள் ஐரா கான் திருமணத்தில் கலந்துக்கொண்டார். இம்ரான் கானும் லேகாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானதால் இருவரும் காதலில் இருப்பார்களா என்ற சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியானது. இந்த லேகா வாஷிங்டன் யாரென்று தெரியுமா?

லேகா வாஷிங்டன் சென்னையில் 1987ம் ஆண்டு பிறந்தவர். இவரின் முன்னோர்கள் இத்தாலி மற்றும் மகாராஸ்டிராவில் பிறந்தவர்கள். இவரின் அம்மாவும் மகாராஸ்டிராவில் தான் பிறந்தார். அதனால் லேகா தமிழ், மராத்தி மற்றும் ஆங்கில ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவர். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்தான் முடித்தார்.

இவர் படித்துக்கொண்டிருக்கும்போதே SS மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் தான் 1999ம் ஆண்டு வெளியான ‘காதலர் தினம்’ படத்தில் வரும் ‘ஓ மரியா’ பாடலில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் திரையில் தோன்றும் ஒரு வாய்ப்பு லேகாவிற்கு கிடைத்தது. பிறகு 2004 ம் ஆண்டு ‘யுவா’ என்ற இந்தி படத்தில் ஒரு தூதுவராக கேமியோ ரோல் செய்தார். 2007ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘கெட்டவன்’ படத்தில் ஒரு பிராமின் பெண்ணாக கேமியோ ரோல் மற்றும் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்திலும் ஒரு சிறு காட்சியில் வந்தார்.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக கேமியோ ரோல் மட்டுமே செய்த லேகா 2008ம் ஆண்டு ‘ஜெயம்கொண்டான்’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் படம் முழுவதும் நடித்தார். இந்த படத்திற்காக விஜய் விருதில் சிறந்த துணை நடிகர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழியிலும் மொத்தம் 15 படங்கள் நடித்தார். இவரின் கடைசி படம் 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘டைனமைட்’ என்ற படம்தான். பிறகு 2017ம் ஆண்டு ‘ரங்கூன்’ என்ற ஹிந்தி படத்திற்கு பாடலாசிரியராக பணியாற்றினார்.

ஐபிஎல் சீசனின் முதல் தொடரில் தொகுத்து வழங்கிய பெருமை லேகாவிற்கே சேரும். இவர் இதற்காக கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டர்களைப் பற்றி நிறைய தேடி தேடித் தெரிந்துக்கொண்டார். இதற்காக இவருக்கு உதவி செய்தவர் முன்னாள் கிரிக்கெட்டர் அஜய் ஜடேஜா. லேகா அப்போது ஒரு சிறந்த தொகுப்பாளராக மக்களின் மனதில் உலா வந்தார். இது அவருக்கு சினிமா துறையில் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்தது.

லேகா தற்போது சொந்தமாக ஒரு தயாரிப்பு வடிவமைப்பு நிறுவனம் வைத்துள்ளார். இவர் ஒரு சிற்பியும் கூட. இவர் 2002ம் ஆண்டு ஒரு கண்காட்சி வைத்தார். பின்னர் 2011ம் ஆண்டு டெல்லியில் அவரது கலைகளை மக்கள் பார்வைக்காக வைத்தார்.

லேகா வாஷிங்டன் 2021ம் ஆண்டு அமிர் கானின் மருமகனான ( சகோதரி மகன்) இம்ரான் கானுடன் காதலில் இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. இம்ரான் கானுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. பிறகு 2019ம் ஆண்டு இம்ரானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தோன்றிய கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்தானது. இந்தநிலையில் 2021ம் ஆண்டு ஒரு பிறந்த நாள் விழாவில் லேகாவும் இம்ரானும் கைக்கோர்த்து செல்லும் புகைப்படம் வைரலானது. இதனால் ரசிகர்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் சேர்ந்திருக்கும்படி ஒரு புகைப்படம் வெளியானது. பிறகு நவம்பர் மாதம் இம்ரான் கான் வலைதளத்தில் பதிவிட்ட ஒரு குடும்ப புகைப்படத்தில் லேகாவும் இருந்தார். இதனால் சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியானாலும் அதிகார்ப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

இந்தநிலையில் இம்மாதம் 3ம் தேதி அமிர் கான் மகளான இரா கானுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் அமிர் கானின் உறவினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். அப்போது இம்ரான் கானும் லேகாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை அமிர் கானின் உறவினர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதனால் இம்ரானும் லேகாவும் காதலில் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், 90ஸ் கிட்ஸ்களுக்கு அறிமுகமாகியிருந்த லோகா வாஷிங்டன் யார் என 2 கே கிட்ஸ்கள் இணையத்தில் தேடிவருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com