முதல்முறையாக இணைந்த தனுஷ் - வடிவேலு கூட்டணி : இத்தனை ஆண்டுகளாக இணையாத ரகசியம் உடைத்த வடிவேலு!

தீப்பந்தம் கொளுத்தி போட்டாங்க: தனுஷ் படத்திலிருந்து வடிவேலு விலகியதற்கான அதிர்ச்சித் தகவல்!
Dhanush film pooja
D56 Poojax
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் ' D55' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா கோலாலமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து , தனுஷ், பிரீத்தி முகுந்தன் , வடிவேலு , எஸ்ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவை கலந்து உருவாகும் இந்த திரைப்படத்தில் முதல்முறையாக தனுஷும் வடிவேலும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளார்.

2000 - ஆண்டு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலுவிற்கு முழு போட்டியாக இருந்தவர் விவேக் . அந்த காலகட்டத்தில் வடிவேலு அல்லது விவேக் இல்லாமல் எந்த திரைப்படமும் வெளியாகாது. அதிலும் 2000 முற்பகுதியில் தங்களது படங்களில் வடிவேலுவை கட்டாயம் புக் செய்ய வேண்டும் என்று, ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை வற்புறுத்தியதும் உண்டு.

இதில் உச்சபட்சமாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கூட தனது சந்திரமுகி மற்றும் குசேலன் திரைப்படங்களில் வடிவேலுவை தன்னுடன் நடிக்க வைக்க பரிந்துரை செய்துள்ளார். என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச காமெடி நடிகராக இருந்தாலும் , நீண்ட காலமாக தனுஷுடன் மட்டும் வடிவேலு இணைந்து நடித்தது இல்லை. தனுஷ் திரைப்படங்களில் பெரும்பாலும் காமெடி நடிகருக்கான வாய்ப்பு கருணாஸிற்கே செல்லும் , சில நேரங்களில் மயில்சாமிக்கு அந்த வாய்ப்பு செல்லும்.

இந்த சூழலில் தனுஷும் வடிவேலும் , சுராஜ் இயக்கத்தில் உருவான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் இணைய இருந்தனர். அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளில் ஆரம்பத்தில் வடிவேலு நடித்திருந்தாலும் , படப்பிடிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக வடிவேலு அந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த நேரத்தில் விவேக் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கச் சென்று, தனது நகைச்சுவை வாய்ப்புகளை இழந்திருந்தார்.

பின்னர், படிக்காதவன்(2009) திரைப்படத்தில் வடிவேலு நடித்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் கமிட்டானார். அந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகள் அதிக நகைச்சுவை நிறைந்ததாக இருந்தது. அதைத் தொடர்ந்து தனது உத்தம புத்திரன் , வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் விவேக் உடன் இணைந்து தனுஷ் நடித்தார்.

Vadivelu dhanush
padikkathavan film x

தற்போது சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெயரிடப்படாத தனுஷின் D56 திரைப்படத்தின் மூலம் தனுஷ் - வடிவேலு கூட்டணி உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வடிவேலு பல ஆண்டுகளாக தனுஷ் படத்தில் நடிக்காத காரணத்தை கூறினார்.

"நாங்கள் ஏன் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம்? திரைத்துறையில் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் கொளுத்தி போடுவது தாராளமாக நடக்கும், பத்த வைப்பார்கள் என்று கிராம பக்கம் செல்வார்கள். ஆனால், இந்த சினிமா துறையில் தீப்பந்தத்தையே கொளுத்திப் போட்டு விடுபவர்கள் உண்டு. அப்படியான சில காரணங்களால்தான் நாங்கள் இணையாமல் இருந்தோம். தற்போது நாங்கள் இணைந்து நடிக்கும் பொன்னான நேரம் வந்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மிகச் சிறந்த இயக்குனர் , இந்த படத்தில் என்னுடன் நண்பர் எஸ் ஜே சூர்யாவும் நடிக்கிறார். கதையைக் கேட்டபோதே இந்த படம் மாபெரும் வெற்றி அடைய என்று தோன்றியது" என்று வடிவேலு கூறியிருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com