அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரம்மாண்ட படத்தில் மிருணால் தாகூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா?
சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியானது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் கசிந்தன. அந்தப் படத்தின் முதற்கட்ட பணிகளும் ஆரம்பமானதாக சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பல காலமாக வெளியாகவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ வெளியிட்டார்.
ஒரு பீரியடிக் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் இதில் நடிக்கும் மற்ற நடிகை நடிகர்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இப்படியான நிலையில்தான், இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மிருணால் தாகூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் ஒரு நடிகை மிருணால் தாகூர். இருமலர்கள் என்ற டப்பிங் சீரியல் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர்தான் மிருணால் தாகூர்.
அவரை அப்போது மிருணால் தாகூர் என்று சொன்னால் தெரியாது. அம்மு என்று சொன்னால் அனைவருக்குமே தெரிந்துவிடும். அந்தளவிற்கு இந்த சீரியலின்மூலம் பிரபலமானார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. ஹிந்தியில் சூப்பர் 30 போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே அவர் வெள்ளித்திரையில் பிரபலமானது தெரியவந்தது.
ஆனால், துல்கர் சல்மானுடன் நடித்த சீதா ராமம் படத்தின்மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றார். இன்று மிருணால் தாகூருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து அவர் நானியுடன் ஹாய் நான்னா படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை பிரபலமானார். பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் The Family Man படத்தில் நடித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜூனுடன் கைக்கோர்க்க உள்ளார்.
புஷ்பா 2 படத்திற்கு பிறகு உலகளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், அடுத்து அட்லியுடன் கைக்கோர்ப்பது இந்திய அளவில் ரசிர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.