வரிசை கட்டி நிற்கும் படங்கள்... படுபிசியான நடிகையாக மாறிப்போன நயன்தாரா

சினிமா, குழந்தைகள், தொழில் என நயன்தாரா தொடர்ந்து பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
Nayanthara
Nayanthara
Published on

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவர் ரசிகர்களால் செல்லமாக ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் தன்னை ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா தனது பிஸியான வேலைகளின் நடுவில் கிடைக்கும் நேரத்தை தனது குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரைவுலகிலும் காலடி வைத்தார். இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. இதுமட்டுமின்றி திருமணத்துக்கு பிறகும் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் மாதவன், சித்தார்த் உடன் சேர்ந்து நடித்து ஓ.டி.டி.யில் வெளியான ‘டெஸ்ட்' என்ற படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை தொடர்ந்து தற்சமயம் பல படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தை சமீபத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையில் வெளிவர உள்ளது.

இது தவிர ‘ராக்காயி' மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்-2' படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இத்துடன் கவின் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

‘டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடனும், டாக்சிக் என்ற கன்னட படத்தில் ‘கே.ஜி.எப்.' புகழ் யாஷ் உடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுதவிர ‘தனி ஒருவன்-2', மம்முட்டியுடன் புதிய படம் என கைவசம் இருப்பதால், இந்த ஆண்டில் மட்டுமல்ல அடுத்த ஆண்டிலும் மிக பிசியான நடிகையாக மாறி போயுள்ளார் நயன்தாரா.

சினிமா துறையில் நடிகை நயன்தாராவின் அர்ப்பணிப்பு மற்றும் அவர் ஈட்டிய வெற்றி அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமா மட்டுமின்றி தொழில்முனைவராகவும் அவர் வலம் வருகிறார். நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் உடன் இணைந்து "9 ஸ்கின்" என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி, சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

சினிமா, குழந்தைகள், தொழில் என நயன்தாரா தொடர்ந்து பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
நயன்தாரா செய்த செயல்… மீனா கொடுத்த பதிலடி… !
Nayanthara

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com