திருமணமான சில நாட்களிலேயே ஹன்சிகா குடும்பத்தில் திருமண முறிவு சம்பவம்!

திருமணமான சில நாட்களிலேயே ஹன்சிகா குடும்பத்தில் திருமண முறிவு சம்பவம்!

பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவரது சகோதரரின் திருமண வாழ்க்கை விவாகரத்து நிலையை எட்டியுள்ளதாக அறியப்படுகிறது.

தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவரது திருமணம் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. இவரது திருமண விழாவில் கோலிவுட், பாலிவுட் என நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணம் முடிந்து பத்து நாட்கள்கூட முடியாத நிலையில், தற்போது அவரது அண்ணனின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நடிகை ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானிக்கும் முஸ்கான் நான்சிக்கும் கடந்த வருடம் மார்ச் 21 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவருக்குமிடையே சுமூகமான உறவு இல்லை எனவும் கூறப்படுகிறது. பல நாட்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்து முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. அதை உறுதிபடுத்தும் விதமாக, ஹன்சிகாவின் சகோதரர் தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் இருந்து தன்னுடைய திருமணம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

இவர்களது திருமணமும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்றது. இருந்தும் குறுகிய காலகட்டத்திலேயே இவர்களின் திருமண வாழ்வு விவாகரத்தை எட்டியுள்ளதற்கான காரணமும் தற்போது அறியப்பட்டுள்ளது.

பிராசந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சிக்கு பெல்ஸ் பால்ஸி எனப்படும் முக முடக்கம் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கத்தால், அவருடைய முகம் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள முஸ்கான் நான்சி, பெல்ஸ் பால்ஸி நோயால் தான் அனுபவித்து வரும் வலிகளை உருக்கமாக கூறியதோடு, தனக்கு நெருக்கடியாக அமைந்த காலகட்டத்தில் தனது பெற்றோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், அவருடைய அந்த பதிவில் பிரசாந்த் மோத்வானி குறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com