தமிழ் நடிகர் யோகி பாபு ஹாலிவுட் உலகில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
யோகி பாபு காமெடி நடிகராக சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். காமெடியாகவும் அதேசமயம் சட்டென்று எமோஷ்னலாகவும் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர். இவரின் பஞ்ச்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இப்படி தனது திறமையின்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஒரு நாள் நயன்தாராவிற்கே ஜோடியாக நடித்தார். பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தார். கூர்கா, போட் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். என்னத்தான் இவர் ஹீரோவாக நடித்தாலும், காமெடியனாக நடிப்பதையும் விட்டுவிடவில்லை.
அந்தவகையில் தற்போது இவர் ஹாலிவுட்டில் களமிறங்குகிறார்.
திருச்சியை சேர்ந்த இயக்குநர் டெல்.கே.கணேஷ் ஹாலிவுட்டில் Trap city என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றன. சவாலான இசை துறையில் ஒரு சாதாரண இசை கலைஞன் எப்படி சாதிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
இயக்குநர் டெல்.கே.கணேஷ் தனது கைபா பிலிம்ஸ் பேனரில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில்தான் நடிகர் யோகி பாபு நடிக்கிறாராம். ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கல் ஜாக்சன் போல் நடனமாடுவது போல் ஒரு தனித்துவமான காட்சியில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றே சொல்லப்படுகிறது.
மேலும் நெப்போலியன் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். நெப்போலியனை டெவில்ஸ் நைட்: 'டான் ஆஃப் தி நைன் ரூஜ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருந்தார் டெல் கே. கணேஷன்.
அந்தவகையில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் யோகி பாபு என மேலும் இரண்டு தமிழ் நடிகர்களை அறிமுகப்படுத்துகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டுக்கு நடிக்க சென்ற யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
யோகி பாபு மற்றும் ஜிவி பிரகாஷின் இந்த வளர்ச்சி குறித்து கோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.