அதர்வாவுடன் இணையும் பிரபல கண்டென்ட் கிரியேட்டர்!

Atharva
Atharva

லைகா ப்ரொடக்ஸன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல கண்டென்ட் கிரியேட்டர் ஒருவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அதர்வா. இவர் தற்போது 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சித்தா படத்தில் நடித்து புகழ்பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகையான நிமிஷா, சித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஸன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

அந்தவகையில்தான், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா ப்ரொடக்ஸன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஆகாஸ் பாஸ்கரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் அதர்வாவிற்கு ஜோடியாக கண்டன்ட் கிரியேட்டர் நிஹாரிக்கா நடிக்கவுள்ளார்.

N.M.Niharika
N.M.Niharika

இவர் நகைச்சுவையாக நடிக்கும் ப்ரொமோஷன் வீடியோக்கள், நகைச்சுவை வீடியோக்கள் பெரிய அளவில் பிரபலமாகின. அதன்பின்னர், அவர் பிரபல கிரிக்கெட்டர்கள், பாலிவுட் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து வீடியோ செய்திருக்கிறார். இவரின் தனித்துவமான நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. அந்தவகையில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. நிஹாரிகா சமீபத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமானார். நெட்ஃபிளிக்ஸின் பிரபலமான தொடரான ​​பிக் மவுத் தொடரில் நடித்தார்.

ப்ரீ ப்ரொடக்ஸன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நிஹாரிகா கூறியதாவது, “இது மிகவும் வேடிக்கையான பொழுதுபோக்கு படமாகும்.

இதையும் படியுங்கள்:
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை குதூகலிக்க வந்த வடிவேலு... கலகலப்பான ஷோவின் அசத்தல் புரோமோ!
Atharva

இது காதல், நகைச்சுவை, நட்பு, ப்ரேக்கப் கலந்தப் படமாகும். சில காட்சிகள் நியூயார்க்கில் படமாக்கப்பட்டன. எனவே, நியூயார்க்கில் வசிக்கும் ஒரு கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதால், நான் நியூயார்க்கிற்கு சென்றேன். எனது கதாப்பாத்திரம் என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல எனக்கு அனுமதி இருக்கிறதா? என்று எனக்குத் தெரியவில்லை.” என்று பேசினார்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com