கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'டார்லிங்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கடவுள் இருக்கான் குமாரு', 'மொட்டசிவா கெட்டசிவா' மற்றும் அண்மையில் வெளிவந்த 'ராஜவம்சம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த விழாவில் அஜித்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ''ஆளுமா டோலுமா'' பாட்டுக்கு ஆதியும் நிக்கிகல்ராணியும் செம டான்ஸ் போட்டுள்ளனர். 

logo
Kalki Online
kalkionline.com