விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் ‘லாபம்’ ரிலீஸ்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:  விஜய் சேதுபதியின் ‘லாபம்’ ரிலீஸ்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ச. பத்மநாபன்.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக நாளை தியேட்டர்களீல் வெளீயாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தன் ஒவ்வொரு படங்களிலும் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் எஸ்பி ஜனநாதன், 'லாபம்' படத்திலும் சாதாரண மக்களிடம் கார்ப்பரேட் கம்பெனிகள் காற்றுடன் உழைப்பையும் சுரண்டுகிறது என்பதை காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாகவும் வேறு சில கெட்டப்புகளிலும் நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி நடிகை ஸ்ருதிஹாசன். மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு!

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'லாபம்' படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த நிலையில், இப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை (செப்டம்பர் 9) 'லாபம்' திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாவதால் பண்டிகையுடன் சேர்த்து 'லாபம்' படத்தையும் இணைந்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி உள்ளனர் .

logo
Kalki Online
kalkionline.com