ஹாலிவுட் ஹீரோக்களை தெறிக்க விட்ட  தனுஷ்!

ஹாலிவுட் ஹீரோக்களை தெறிக்க விட்ட  தனுஷ்!
Updated on

கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் கோலோச்சிய நடிகர்  தனுஷ் இப்போது ஹாலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.அவர் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இயக்கியுள்ளனர். 

இந்தப் படம்  ஜூலை 22-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரமோஷன் பணிக்காக இப்பட இயக்குனர்கள் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்த மாஸான சண்டைக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் ஹீரோக்களையே அடித்து தெறிக்க விட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com