கோஸ் சட்னி

கோஸ் சட்னி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவை:
கோஸ் – 100 கி
வெஙகாயம் 1
மிளகு – 6
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு, கருவேப்பிலைசிறிது

செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். முட்டைகோஸை நன்கு அலசி எடுத்து பிறகு சிறிதாக நறுக்கி கொள்ளவும். கோஸ் ,வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோஸ் சட்னி ரெடி. இட்லி தோசைக்கு சரியான ஜோடி.

logo
Kalki Online
kalkionline.com