நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!

மொத்தமுள்ள 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கிற குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 92 காலி பணியிடங்களுக்கு , 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

குரூப் 1 முதல் நிலை தேர்வு
குரூப் 1 முதல் நிலை தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு குறித்து அறிவித்திருந்தது. அதில், 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பதவிகள் என 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்திருந்தது. நாளை இதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com