காதல் கதிரவன்!

காதல் கதிரவன்!
Updated on

அதரங்கள் பயத்தால் துடித்தாலும்
மனதில் பொங்கும் உன் மீதான காதலை
கதிரவனே.. எப்படி சொல்வதென தெரியவில்லை.
நான் உன்னை நேசிப்பதை
நீ எப்போது உணர்ந்து என்னோடு பயணிப்பாய்?
நிச்சயம்  பயணிப்பாய் என்ற  நம்பிக்கையுடன்
கிழக்கில் காலை வரும் சூரியனே
தினம் தினம் உன்னை வணங்கி வரவேற்கிறேன்!.

-உஷாமுத்துராமன், திருநகர்

logo
Kalki Online
kalkionline.com