சமையல் எண்ணெய் அதிரடி உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி!

சமையல் எண்ணெய் அதிரடி உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை அடுத்து சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது:

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ நல்லெண்ணெய் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ டால்டா 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com