தஞ்சை தேர்த் திருவிழா விபத்து: முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்!!

தஞ்சை தேர்த் திருவிழா விபத்து: முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்!!

தஞ்சாவூர் தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட  11 பேர் உயிரிழப்பு. மேலும் ஆபத்தான நிலையில் 4 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94-ம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது நடைபெற்ற தேர்த் திருவிழாவில், அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசி மின்சாரம் தாக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  தேர் ஊர்வலம் வரும் பாதையில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியிருந்ததால், மக்கள் கூட்டம் தள்ளி நின்றிருந்தனர். இல்லாவிட்டால் விபத்தில் சிக்கி பலியானோர் என்ணிக்கை அதிகரித்திருக்கும்.

-இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க முதல்வர் ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டுச் சென்றார். மேலும் இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் தஞ்சை தேர் விபத்தில் இறந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com