0,00 INR

No products in the cart.

பாம்புக்கு பயந்த ரசிகர்கள்

நூல் அறிமுகம்

 

– எஸ். சந்திரமௌலி

 

நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா அண்மையில்  சென்னையில் வெகு விமரிசையாக நடைப்பெற்றதுஅதனையொட்டி விருதுநகரைச் சேர்ந்த என்..எஸ் சிவகுமார் தொகுத்த காருக்குறிச்சி நூற்றாண்டு விழா மலர்நின்றொளிரும் மின்னல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதுபல்வேறு கலைஞர்களும், பிரமுகர்களும், இசை விமர்சகர்களும் காருக்குறிச்சி பற்றி பல அரிய தகவல்களையும், அனுபவங்களையும் நெகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் மலரில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

மலரில் இடம்பெற்றுள்ள சுவையான விஷயங்களுக்கு இங்கே கொஞ்சம் சாம்பிள்:

சைக் கலைஞர்களைப் போற்றி வளர்த்தவர்களில் முக்கியமானவர் அங்குவிலாஸ் எம்.வி. முத்தையா பிள்ளை. திண்டுக்கல்லில் இவரது இல்லத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் நிகழ்ச்சி நடத்துவது அக்காலக் கலைஞர்களின் கனவாக இருந்தது.

பெரும் கலைஞர்களை வரவழைத்து கௌரவப்படுத்துவது மட்டுமின்றி, நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு முப்பது டஜன் வேட்டி, துண்டுகளை அவர் வழங்குவார். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியை அவரிடமிருந்த 16 எம்எம் சினி காமிராவிலும், ஸ்பூல் டேப்பிலும் பதிவு செய்து கொள்வார்.  பிரபல வித்வான்கள் பக்கத்து ஊர்களில் ஸ்பெஷல் கச்சேரி செய்யும் நாட்களில் அங்கே சென்று அந்தக் கச்சேரிகளையும் பதிவு செய்வது அவரது பழக்கம். இப்போது நாடெங்கும் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் காருகுறிச்சி பதிவுகளில் பாதி அங்குவிலாஸ் முத்தையா பிள்ளை செய்த பதிவுகள்தான்.   அதுபோலவே, காருகுறிச்சி இறந்த செய்தி கிடைத்தவுடன் அப்போது ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் மருமகன் ஏ. நடராஜன் திண்டுக்கல்லுக்குச் சென்று அங்கிருந்த பதிவுகளில் சில முக்கிய பதிவுகளை வாங்கி வந்து அன்றே வானொலியில் ஒலிபரப்பு செய்தாராம்.

கர்நாடக சங்கீத ரசிகர் என்று சொல்லும் போது குறிப்பாக  நடிகர் பாலையா ஒரு நாகசுர ரசிகர் என்பதைச் சொல்ல வேண்டும். அவருக்கு குறிப்பாக நாகசுரத்தில் இருந்த மிக ஆழ்ந்த ரசனையை, ஈடுபாட்டை விளக்க ஒரு சம்பவம்:

பாலையா தன் பெரிய மகள் துர்காவின்  திருமணத்தை பெரும் தடபுடலாக நடத்தினார்.  ஐந்து நாள் கல்யாணம். திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் பாலையாவின் நெருங்கிய நண்பரான சிவாஜி கணேசன். கல்யாணத்தை ஒட்டி ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானமும் வேட்டியும் புடைவையும் அளித்தார் பாலையா. அந்தக் கல்யாணத்தில் காருகுறிச்சி அருணாசலம் அசாத்தியமாக நாகசுரத்தை வாசித்து அனைவரையும் மெய் மறக்கச் செய்தார். பாலையாவுக்கு அந்த வாசிப்பைக் கேட்டு பேரானந்தம். பாலையா அப்போதெல்லாம் தன் விரலில் 13 கற்களும் கொம்பும் பதித்த மோதிரம் போட்டிருப்பார். அப்படியே அந்த மோதிரத்தைக் கழற்றி காருகுறிச்சியாரின் விரல்களில் மாட்டி மகிழ்ந்தார். காருகுறிச்சியார் இந்தப் பாராட்டைக் கண்டு நெகிழ்ந்து போனார்.

மயிலாடுதுறை ஆனந்த தாண்டவபுரத்தில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின்  கச்சேரி. கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போதே காருகுறிச்சியையும் கக்காயி நடராஜ சுந்தரத்தையும் வாசிக்கச் சொல்லி விட்டு டி.என்.ஆர். ஓய்வு  எடுக்க சென்று விட்டார். இதையறிந்த உள்ளூர்  வித்வான்கள்  சஹானா ராகத்தில் மிகவும் சிக்கலான பல்லவியை வாசிக்கச் சொல்லி சவால் விட்டனர். “நாம் இல்லாத வேளையில் நம் சிஷ்யர்களை இன்னலுக்குள்ளாக்குகிறார்களே என்று எண்ணிக் கொண்டே கச்சேரி மேடைக்கு திரும்பினார் டி.என்.ஆர். ஆனால் அவருக்கோ ஒரே  ஆச்சரியம். காருகுறிச்சி அந்த சிக்கலான பல்லவியைத் தாளம் தவறாமல் இன்னும் மெருகேற்றி வாசித்துக்கொண்டிருக்கிறார். மேடைக்கு வந்த டி.என்.ஆர். காருகுறிச்சியை ஆரத்தழுவி பாராட்டினார். சவால் விட்டவர்கள்  சத்தமில்லாமல் இடத்தைக் காலி செய்தார்கள்.

ஒரு திருமண நிகழ்ச்சியில் காருக்குறிச்சி காப்பி  ராகத்தில் ஒரு கீர்த்தனை வாசித்தார்.  அந்த திருமண நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற இசை விமர்சகர், திரு.சுப்புடு அவர்களும் வந்திருந்தார். மேடையில் காருகுறிச்சியார் பொழிந்துகொண்டிருந்த நாதமழையில் நனைந்து தன்னை மறந்து லயித்தவர், கீர்த்தனை முடிந்ததும் தன்னை மறந்து சபாஷ் என்று குரல் எழுப்பி கைதட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு மட்டுமின்றி, காருகுறிச்சியிடம் “ நீர் வாசித்ததுதான் காப்பி (ராகம்) மத்தவா வாசிப்பது இதோட காப்பி (நகல்)” என்றாராம்.

1955இல் திருநெல்வேலி எம்.டி.டி. இந்து கல்லூரி மைதானத்தில் காருகுறிச்சியாரின் கச்சேரி நடந்திருக்கிறது. மைதானத்தில் நடைபெற்ற கச்சேரியில் ஜனத்திரள்  அலை மோதியது. அப்போது ‘நாகின்’இந்திப் படத்தில்  மகுடி இசையோடு லதாமங்கேஷ்கர் பாடிய பாட்டு மிகவும் பிரபலம். நிகழ்ச்சியின் முடிவில் கூடியிருந்த ஜனத்திரள் காருகுறிச்சியை அப்பாடலை வாசிக்கச் சொல்லி கோஷமிட்டார்கள். காருகுறிச்சியார் அந்த திரைப்பாடலை தனது நாகஸ்வரத்தில் மகுடி போல வாசிக்கவே, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம். அது மட்டுமில்லை; தொடர்ந்து கரகோஷம் எழுப்பி, ஒன்ஸ்மோர் கேட்க, காருகுறிச்சியார் சிரித்துக்கொண்டே மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை வாசித்தார்.

வேறு ஒரு முறை அதந்தப் பாடலை வானொலியில் காருக்குறிச்சி வாசித்தபோது ஒரு விமர்சகர்,  “இரவு வீட்டில் வானொலியில் காருகுறிச்சியாரின் இசையை ரசித்த மக்கள் ‘மகுடி இசையை’க் கேட்கும்போது பாம்புகள் வீட்டுக்குள்  வந்துவிடப்போகிறது என்று பயந்து, கால்களை மேசையின் மேல் வைத்து கேட்டு மகிழ்ந்தனர் என்று எழுதி இருந்தாராம்.

அட்சரம் பதிப்பகம் வெளியீடு,
விலை: ரூ.350/-
(தொடர்புக்கு: 91596 59788, 86677 52075)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...