0,00 INR

No products in the cart.

இருவர்

ஒரு நிருபரின் டைரி – 17

– எஸ். சந்திரமெளலி

 2009ம் வருடம் செப்டம்பரில் தென்கச்சி சுவாமிநாதனுக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக். உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தாகள். ஐ.ஸி.யூ.வில் இருந்தவரிடம் ஓர் அன்பர் “சார்! சன் டி.வி.யில ‘அசத்தப் போவது யாரு?’ நிகழ்ச்சியில உங்களைப்போலவே ஒருத்தர் பேசி அசத்திட்டாரு” என்றார். மறு வினாடி தென்கச்சி “என்னை மாதிரியே பேசி என்ன பிரயோஜனம்? எனக்குப் பதிலா இங்கே வந்து படுத்துக்கிட்டா எனக்கு நிம்மதியா இருக்குமே!” என்று ஜோக்கடித்தார். நகைச்சுவைதான் அவரது உயிர்நாடி.

’இன்று ஒரு தகவல்’ மூலமாக வானொலி நேயர்களுக்கு அறிமுகமான அவரது குரல் நாளடைவில் உலகமெங்கும் பிரசித்தி பெற்றுவிட்டது. மிகவும் எளிமையான மனிதர். ஆனால் மேடைகளில் கொஞ்சம் பொய் சொல்லுவார். தன்னுடைய பேச்சை ஆரம்பிக்கும்போது “என்னை என்னவோ பெரிய நகைச்சுவைப் பேச்சாளர் என்று சிலபேர் சொல்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை; பென்ஷன்தாரர்கள் மீட்டிங்குகளில் பேசக் கூப்பிடுவார்கள்; ரிடையர் ஆனவர்களுக்கு வேறு முக்கியமான வேலை எதுவும் இல்லை என்பதாலும், பலருக்குக் காது கொஞ்சம் மந்தம் என்பதாலும் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்” என்ற அளவுக்கு வெஜிடேரியன் பொய்யாகவே அது இருக்கும். ஆனால் அவரது பேச்சை மொத்தக் கூட்டத்தினரும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். கைத்தட்டல்களும் சிரிப்பலைகளும் நான் கியாரண்டி.

தென்கச்சி சுவாமிநாதனைத் தெரிந்த பலருக்கு ’தென்கச்சி’ என்ற ஊர் எங்கே இருக்கிறது என்பது தெரியாது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரத்தில் உள்ள ஒரு சின்ன ஊர்தான் தென்கச்சி. அப்பா கோவிந்தசாமி; அம்மா கோவிந்தம்மாள். கோவை வேளாண்மைக் கல்லூரியில் பி. எஸ்ஸி. விவசாயம் படித்தவர், தமிழக அரசாங்கத்தின் வேளாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகள் விரிவாக்க அலுவலராகப் பணியாற்றியிருக்கிறார். அதைவிட அதிசயமான நியூஸ், சொந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக ஏழு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். நல்ல கவிஞரும்கூட.

அவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம், நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு நெல்லை பொருட்காட்சியில் நாடகம் போட வந்திருந்தார். தென்கச்சி சுவாமிநாதன் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டார். பேட்டி முடிந்தவுடன் தங்கவேலு “தம்பி, நீங்க என்னை மாதிரியே பேசறீங்களே!” என்றார். ஆமாம்! தென்கச்சியில் குரல் தங்கவேலுவின் குரல்போலவே இருக்கும்.

இது நடந்து பல வருடங்களுக்குப்பிறகு தங்கவேலு தென்கச்சியின் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டார். “உடம்பு சரியில்லை; ஓட்டல் சாப்பாடு வேணாமே” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடாமலே புறப்பட்டார். அடுத்த சில நாள்களில் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். சில நாட்கள் கழித்து நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் அழைப்பின்பேரில் ஏவி.எம். ஸ்டுடியோவுக்குச் சென்றார் தென்கச்சி சுவாமிநாதன். தங்கவேலு கடைசியாக நடித்து, டப்பிங் பேசாமல் இறந்துவிட்ட ‘பெரிய மருது’ படத்தில் தங்கவேலுவுக்காக டப்பிங் பேசினார். “தங்கவேலு மாதிரியே பேசறீங்க சார்!” என்றார்கள் எல்லோரும்.

ஒரு நிகழ்ச்சிக்காக வானொலி நிலையத்துக்கு வந்திருந்த திருக்குறள் முனுசாமி ஒலிப்பதிவு முடிந்து புறப்பட்டபோது தென்கச்சியை அருகில் அழைத்து “இன்று ஒரு தகவல்-ன்னு தினமும் சொல்றியே! இதெல்லாம் எங்கேயிருந்து எடுக்கறே?” என்று கேட்டார். பட்டென்று “உங்க பாக்கெட்டிலிருந்துதான் ஐயா எடுக்கறேன்” என்று சொன்னார் தென்கச்சி.

“அது எப்படி?”

“நீங்க பேசற கூட்டத்துக்கெல்லாம் தவறாம வந்துடுவேன், உங்க பேச்சைக் குறிப்பு எடுத்துக்குவேன். அதையெல்லாம் கொஞ்சம் மாத்தி ரேடியோவுல சொல்லிடுவேன்.”

திருக்குறள் முனுசாமி சிரித்தார்.

“ஐயா! உங்க பாக்கெட்டிலிருந்து எடுக்கறேன்னு சொல்றேன். உங்களுக்குக் கோவம் வரலியா?”

“அது எப்படி வரும்? நானும் வேற எவன் பாக்கெட்டிலயோ இருந்துதானே எடுத்து என் பாக்கெட்ல வெச்சிக்கிறேன்?” என்று மீண்டும் திருக்குறள் முனுசாமி சிரித்தார்.

இதேபோல, ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி கமலாத்மானந்தா தென்கச்சியைச் சந்திக்க விரும்பினார். “தான் ராமகிருஷ்ண விஜயத்திலிருந்து விஷயங்களை உருவி, உல்டா பண்ணி ரேடியோவுல சொல்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கத்தான் அவர் அழைக்கிறார்” என்று தயக்கத்துடன் சென்றார் தென்கச்சி. ஆனால் அவரோ “ரேடியோவுல நல்ல விஷயங்களைச் சொல்லற நீங்க, ராமகிருஷ்ண விஜயத்துலயும் அதையெல்லாம் எழுதலாமே” என்று சொன்னபோது மனுஷருக்கு இன்ப அதிர்ச்சி.

தென்கச்சி நகைச்சுவைப் பேச்சாளரானது எப்படி?

“நான் ரேடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் எங்கள் நிலைய இயக்குனர் ஹியூமர் கிளப் நிகழ்ச்சிக்குப் பேச அழைக்கப்பட்டிருந்தார். எதிர்பாராத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை. அவர் என்னை அழைத்துத் தன் சார்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்படி சொல்லிவிட்டார். எனக்கோ முன் பின் மேடை ஏறிய அனுபவம் கிடையாது. ஆகவே நான் கல்லூரி நாட்களில் கேட்ட, பத்திரிகைகளில் படித்த நகைச்சுவைத் துணுக்குகளையெல்லாம் நினைவுகூர்ந்து பேசினேன், ஒருவழியாக எல்லோரையும் சிரிக்கவைத்து விட்டேன். அதன்பிறகு, நகைச்சுவைச் சங்க நிகழ்ச்சிகளுக்கு என்னை அடிக்கடி கூப்பிட ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் வானொலியில் “இன்று ஒரு தகவல்” வழங்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதற்காக நிறையப் படித்து, பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டு பேசினேன். நிகழ்ச்சி பிரபலமானது, என்னையும் ஒரு நகைச்சுவைப் பேச்சாளனாக முத்திரை குத்திவிட்டார்கள். இதற்கெல்லாம் நான் அகில இந்திய வானொலிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் தென்கச்சி.

கல்கி – ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய “நில், கவனி, வெற்றிகொள்” நிகழ்ச்சியில் தென்கச்சி ”கடவுள்” என்ற தலைப்பில் பேசினார். ஒரு மணிநேரம் வெகு சுவாரசியமான பேச்சு. திருமூலர், விவேகானந்தர் முதற்கொண்டு அனைவரையும் கோடிட்டுக் காட்டிப் பேசினாலும், நகைச்சுவைத் தெறிப்புக்களுக்கு பஞ்சமே இல்லை.

அவரது “இன்று ஒரு தகவல்” பல பாகங்களாக வெளியாகியுள்ளது. 1988ல் ஆரம்பித்த ”இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி வானொலி, தொலைக்காட்சிமூலம் மெகா சீரியல்களையும் மிஞ்சித் தொடர்ந்தது சாதனைதான்.

•••• •••• ••••

ன்மிகத்தையும் அறிவுபூர்வமான விஷயங்களையும் நகைச்சுவையோடு சொன்னவர் தென்கச்சி என்றால், பாலுணர்வு விஷயங்களை நகைச்சுவையோடு சொன்னவர் டாக்டர் மாத்ருபூதம். ‘என்னிடம் வருகிற நோயாளிகளை மனநல வைத்தியம் பார்த்து நல்லபடியாக மாற்றிவிடுவதால் என்னைச் சிலர் “மாத்தற பூதம்” என்பார்கள்; நிறைய மாத்திரைகள் கொடுப்பதால் இன்னும் சிலர் என்னை ” மாத்திரை பூதம்” என்பார்கள். அப்படிச் சொன்னால் உடனே நான் ” உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நோய் குணமாகிவிடும் என்று சொல்லி ஏமாத்தற பூதம் நான் இல்லை என்பேன்” என்று ஜோக்கடிப்பார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி நாட்களில் நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைக் கூறினார்.

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட். பேராசிரியர் பாடத்தை நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார் போல இருக்கே!” என்றதும் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாணவரான மாத்ருபூதம் சட்டென்று “சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த்தமாகச் சொல்ல, மாணவர் மாத்ருபூதம் அதைக் காமெடியாக்கிவிட்டார்.

ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இப்படி நிறைய டாக்டர் ஜோக்ஸ் சொல்லுவார் மாத்ருபூதம். சில சாம்பிள்கள்:

ஒரு டாக்டரிடம் நோயாளி : “டாக்டர்! நீங்க எமதர்மனைவிடப் பெரிய ஆள்! அவர் உயிரைமட்டும்தான் எடுப்பார்! நீங்க உயிரோட என் சொத்தையும் சேர்த்து எடுத்துக்கறீங்க!”

*      ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தன் கிளினிக்கில் ஓர் எலும்புக்கூட்டை மாட்டி வைத்திருந்தார். ஆனால் சீக்கிரமே அதை அப்புறப்படுத்திவிட்டார். காரணம், டாக்டரின் கிளினிக்கில் இருப்பது அவருடைய முதல் பேஷண்ட்டின் எலும்புக்கூடு என்று யாரோ வதந்தி பரப்பியதுதான்.

*    மனிதர்களே! மாட்டைப்போல உழையுங்கள்; நாயைப்போலச் சாப்பிடுங்கள்; பூனைபோலத் தூங்குங்கள்; முயலைப்போல ஓடுங்கள்; வருடத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் செல்லுங்கள்!

*    ஒருவரது நாய்க்கு உடம்பு சரியில்லை. கால்நடை மருத்துவரிடம் கொண்டுவந்தார். நாயைப் பரிசோதித்த டாக்டர் “நாய் செத்துப் போய்விட்டது” என்றார். நாயின் எஜமானர் நம்பவில்லை. உடனே டாக்டர் அடுத்த அறைக்குப்போய் ஒரு பூனையைக் கொண்டுவந்தார். நாயின் முகத்துக்கு அருகே விட்டார். “பூனை வாசனை தெரிந்தால் நாய் உடனே குரைக்க ஆரம்பித்துவிடும்! உங்க நாய் சும்மா இருக்கிறது; இப்போதாவது நாய் செத்துவிட்டது என்பதை நம்புகிறீர்களா?” என்றார். சோகமான நாயின் சொந்தக்காரர் புறப்பட்டார். அவரிடம் 200 ரூபாய் ஃபீஸ் கேட்டார் டாக்டர்.

“நாய் செத்துப்போனதாகச் சொன்னதற்கு 200 ரூபாயா?” என்று அவர் கேட்க, டாக்டரது பதில்: ”என் கன்சல்டேஷன் 100 ரூபாய். பூனையை வெச்சுப் பண்ணின cat scan சார்ஜ் 100 ரூபாய்.”

டாக்டர் மாத்ருபூதத்தின் “புதிரா? புனிதமா?” என்ற நிகழ்ச்சி தமிழ் சேனல்களில் ஒரு புது முயற்சியாக இருந்தது. பாலுணர்வு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிரபலமாகிவிட்டது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாத்ருபூதம் நன்றாகப் பாடுவார். ”புதிரா? புனிதமா” நிகழ்ச்சியில்கூட இடையிடையே பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும்கூட அவர் பாடியதுண்டு.

நடிகரும்,  முன்னாள் எம்.எல்.ஏ. வுமான எஸ்.வி.சேகர், டாக்டர் மாத்ருபூதத்துக்கு ஒரு பட்டம் கொடுத்தார். என்ன பட்டம் தெரியுமா  அது?

தமிழ்நாட்டின் வயாக்ரா!

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...