0,00 INR

No products in the cart.

பொலிடிகல் பீசா

 பிரியங்காவின் ஆட்டம் ஆரம்பம்!

 

உத்தரப் பிரதேசம்:

பிரியங்கா காந்தி, உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தூசி தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, பா.ஜ.க.வுக்கு வலுவான எதிர்ப்பு கொடுத்து வீழ்த்துவதே அவர் திட்டம் என்கிறார்கள் காங்கிரஸார். அண்மையில், அவர் டெல்லியிலிருந்து, லக்னோவுக்கு விமானத்தில் சென்றபோது, அதே விமானத்தில் பயணம் செய்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  அடுத்து, அவர் மீண்டும் டெல்லிக்கு தனி விமானத்தில் திரும்பியபோது, விமான நிலையத்தில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவரான ஜெயந்த் சவுத்ரியை வற்புறுத்தி தன்னுடன் விமானத்தில் டெல்லி அழைத்துச் சென்றது, பலரது கவனத்தை ஈர்த்தது. ஆக, அம்மையார் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க!

மகாராஷ்டிரா:

காராஷ்டிராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது உறவினரான  மகாராஷ்டிரா
நவ நிர்மாண் சேனா தலைவர்
ராஜ் தாக்கரேவின் அரசியல் வாழ்க்கை  இறங்குமுகமாகவே உள்ளது. 2009ல், மகாராஷ்டிர சட்டசபையின் மொத்தமுள்ள 288 இடங்களில் 13 இடங்களில் ஜெயித்த அவரது கட்சிக்கு, இப்போது சட்டசபையில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.தான். ராஜ் பற்றின லேட்டஸ்ட் நியூஸ் அவரது ஜாகை மாற்றம்தான். மும்பையின் சிவாஜி பார்க் ஏரியாவில்
“சிவ் தீர்த்” என்ற பெயர் கொண்ட புது ஆறு மாடி பங்களாவில் குடியேறி இருக்கிறார். வீட்டிலிருந்து பார்த்தால் சிவசேனாவின் தலைவர்
பால் தாக்கரே நினைவகம் தெரிகிறது. பக்காவாக வாஸ்து பார்த்து கட்டப்பட்டது சிவ் தீர்த். கடந்த 25 ஆண்டுகளில் ராஜ் தாக்கரேவுக்கு இது மூன்றாவது ஜாகை மாற்றம். ராஜ் தாக்கரேவின் அரசியல் மறுவாழ்வுக்கு இந்த இடமாற்றமும், வாஸ்துவும் கை கொடுக்கிறதா என்று பார்க்கலாம்!

ஜார்கண்ட்:

ற்கெனவே மூன்று கட்சி கூட்டணி ஆட்சியை நடத்துவதில் மிகுந்த  சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார் ஜார்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சொரன். இப்போது, தலைவலியோடு திருகுவலியாக குடும்பத்துக்குள்ளே இருந்தே பிரச்னை. ஹேமந்த் சொரனின் அண்ணன் துர்கா சொரன். அவர் இறந்துவிட்டார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் துர்கா சொரனின் மனைவி  சீதா சொரன், தன் மகள்களோடு சேர்ந்து கணவர் பெயரில் “துர்கா சொரன் சேனா” என்ற  ஒரு அமைப்பினைத் துவக்கி, ‘ஜார்கண்ட் தனி மாநிலம் உருவாகக் காரணமானவர்களை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்’ என போர்க்கொடி எழுப்பி உள்ளார்.  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், குடும்பத்தின் “தல”யுமான சிபு சொரன், எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தல என்ன செய்யப்போகுது என்பதே இப்போது ஜார்கண்டின் தலையாய கேள்வி!

மேற்கு வங்காளம்:

மேற்கு வங்காள முதல்வர் மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜிதான் கட்சியில் நெ.2 என்பது எல்லோரும் அறிந்ததுதான். வழக்கமாக  நவம்பரில் தன் பிறந்த நாளன்று, தன் வீட்டுக்கு அருகில் உள்ள மம்தாவின் வீட்டுக்கு பாரம்பரிய பெங்காலி உடையில், காரில் சென்று சந்தித்து, அவரிடம் ஆசிப் பெறுவது அவரது வழக்கம். ஆனால் இந்த வருடம், அபிஷேக் இளமை ததும்ப, ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து, தன் வீட்டு வாயிலில் கூடி இருந்த தொண்டர்களுடன் உற்சாகமாக அளவளாவினார். அடுத்து, காரை விடுத்து, மம்தாவின் வீட்டுக்குத் தொண்டர்கள் படை சூழ நடந்தே சென்றார். ஏன் இந்த மாற்றம்? என கட்சி அளவிலும், மீடியாவிலும் கேள்வி எழுந்துள்ளது! வாரிசு அரசியல்?

பீகார்:

பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் ‘விபாசனா தியானம்’ பயின்று, தினமும் யோகா, தியானம் என்று  சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். விபாசனாவின் பயனை அனுபவபூர்வமாக உணர்ந்த நித்திஷ், இப்போது அதனை மாநில அரசின் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விரிவாக்க உத்தரவு இட்டிருக்கிறார். யோகா பயிற்சிக்காக அவர்களுக்கு 15 நாட்கள் லீவு கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. துருபிடித்த அரசு இயந்திரம் – ’யோகா, தியானம் என்ற எண்ணெய்களுக்கெல்லாம் மசியுமா’ என்பதை பொருத்திருந்துதான் பார்க்கணும்!

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

விற்பதற்கல்ல! விதைக்காக

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திரமௌலி   கேட்பீர்களா? கேட்பீர்களா? பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் இந்தி, ஆங்கிலம் என்று பொளந்து கட்டுகிறார். ஆனால், தன் தாய்மண்ணுக்கு...

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

0
பொலிடிகல் பிஸா   - எஸ். சந்திரமௌலி பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி மம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப்...

வழக்கம் போல மௌனம்தான்!

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திர மௌலி   பெயரில் பிரச்னை ஓட்டு வங்கி அரசியலில், ஆட்சியாளர்கள் இன்ன செய்தால், இன்ன ஜாதி, இன, பிரிவு மக்களின் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள். ஆனால்,...

கொஞ்ச நாள் பொறு தலைவா!

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திர மௌலி   மஹார்யாமன் சிந்தியா. ம.பி.யின் குவாலியர் அரச பரம்பரியின் வாரிசு. காங்கிரசுக்குத் தலைவலி கொடுத்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வந்துவிட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன்.  வயது 26. அண்மையில் குவாலியர் ஜெய...

மழையால் ஓர் உபயோகம் எனக்கு நடந்திருக்கிறது.

சுஜாதா தேசிகன்                                             ...