0,00 INR

No products in the cart.

ஒரு நிருபரின் டைரி

தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பத்திரிகையாளர்சுமார் முப்பதாண்டு காலமாகக் கல்கியில் தொடர்ந்து எழுதிவருபவர்முழுநேரப் பத்திரிகையாளர்பகுதிநேர வங்கி ஊழியர் என்று நண்பர்கள் செல்லமாகக் கிண்டலடிக்குமளவு பத்திரிகைப் பணியில் தீவிர ஆர்வம் கொண்டவர். கல்கி  வாசகர்களுக்காக மௌலி இங்கே தமது பத்திரிகையாளர் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

எஸ். சந்திரமெளலி

 1.  பத்திரிகை  உலகத்துக்கு பாஸ்போர்ட்

டந்த ஆகஸ்ட் மாதக் கடைசியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரியில் ஒரு பெரிய திருவிழா நடைபெற்றதுஅதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதுபற்றியச் செய்திகள்ஆன்லைன் ரெஜிஸ்டிரேஷன் என ஏகப்பட்ட அமர்க்களம்சக்தி குழுமச் சேர்மன் நாமகாலிங்கம்மத்திய அமைச்சர்கள் பசிதம்பரம்தயாநிதி மாறன்ஹிந்து ராம்சன் டீ.விகலாநிதி மாறன்டாக்டர் பத்ரிநாத்நடிகர்கள் சூர்யாபிரபு என்று பல பிரபலங்கள் கலந்துகொண்டதாக மீடியாவில் புகைப்படங்கள் வெளியானாலும்ஏராளமான ஐ..எஸ்..பி.எஸ்அதிகாரிகள்தொழிலதிபர்கள்வக்கீல்கள்சார்டர்டு அக்கவுண்டென்ட்கள் என அத்தனை பிரபலமில்லாதவர்களும் திரளாக வந்திருந்தார்கள்.

“லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்” என்ற அடிப்படையில் அன்று திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு மூலையில் நானும் கூட என் எண்பது வயசு அப்பாவை அழைத்துக்கொண்டு போகத் திட்டமிட்டிருந்தேன்ஆனால் சிலபல காரணங்களால் அது சாத்தியமில்லாமல் போனதில் ரொம்பவே வருத்தம்.

96 ஏக்கர் பரப்பில் பரவி இருக்கும் அந்தக் கல்லூரி வளாகத்தில் 1977-78ல் போய் இறங்கியபோதுஎனக்கு நிஜமாகவே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்ததுபதினோரு வருஷ எஸ்.எஸ்.எல்.சி.யில் 87% மார்க் வாங்கி இருந்தபோதிலும் லயோலாவில் எனக்கு அட்மிஷன் தரவில்லைஎன் அப்பாஎன்னை அழைத்துக் கொண்டு நேரே பிரின்சிபாலை சந்தித்து,  “நான் இந்தக் கல்லூரியில் படித்தவன்அதிலே எனக்கு எத்தனை பெருமை தெரியுமாஅந்தப் பெருமை என் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஆசைஅதற்கு நீங்கள் தடை போடலாமா ஃபாதர்?” என்று மாணவர்கள் மத்தியில் டெரர்” ஆன ஃபாதர் குரிய கோசிடம் கேட்கஅவர் தன் தலையை நிமிர்த்திகண்ணாடி வழியாக என் முகத்தைப் பார்த்தபோதுஅவருக்கே பாவமாக இருந்ததோ என்னவோஅப்ளிகேஷன் மீது ப்ளீஸ் அட்மிட் இன் ஃபர்ஸ்ட் குரூப்” என்று எழுதி இனிஷியல் போட்டு என் அப்பாவிடம் நீட்டி, ” ஃபீஸ் கட்டுங்க” என்றார்என் அப்பா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிடகண்களின் ஓரத்தில் ஆனந்தக் கண்ணீர்.

சென்னை மாநகரத்தில் ஹாஸ்டல் வாசம்சுவையான சாப்பாடுஒரு வருட பி.யூ.சிஓடியே போச்சுஅடுத்த வருடம்பி.யூ.சிமார்க் ஷீட்டுடன், “எங்க காலேஜில நானே போய் அட்மிஷன் வாங்கிடுவேன்கவலைப் படாதே!” என்று அப்பாவிடம் சொல்லிவிட்டுசென்னை வந்தவன்எந்தவித சிக்கலும் இல்லாமல் பி.எஸ்ஸிகணிதம் சேர்ந்தேன்.

என்னுடைய 13 இன்ச் உலகத் தொடர்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது அங்கேஅப்போதுதான்கல்லூரியின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது மாடியில் குயின்ஸ் ஹால்” என்று ஒரு பிரம்மாண்டமான வகுப்பறைஅங்கே தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த ஒரு விழாசிறப்பு விருந்தினர்களாக கல்கி ராஜேந்திரனும்துக்ளக் ஆசிரியர் சோவும் வந்திருந்தார்கள்.

கல்கி ராஜேந்திரன் பேசும்போது சொன்ன விஷயம் எனக்குள்ளே ஆழமாகப் பதிந்து போனது. “பத்திரிகைத் துறை என்பது மிகவும் சுவாரசியங்கள் நிறைந்த ஒரு துறைஅதில் இளைஞர்களுக்கு எழுதுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறதுஆனால் பேங்க் மாதிரியோபெரிய கம்பெனிகள் மாதிரியோ நிறைய சம்பளம் கிடைக்காது (இன்று நிலைமை மாறிவிட்டதுஆகவேநல்லதொரு உத்தியோகம் பார்த்தபடிபத்திரிகைகளுக்கு எழுதுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டார் கி.ராஜேந்திரன்வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த உடன் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு சர்க்குலேஷன் லைப்ரரி ஆரம்பித்திருந்தோம்.  அதற்கு நான்தான் ஒருங்கிணைப்பாளன். “பத்திரிகைகளை முதலில் படித்துவிட முடியும்” என்ற ஆசையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்சர்குலேட்டிங் லைப்ரரி நன்றாகவே சுழன்றுகொண்டிருந்ததுஎளிய ஃபார்முலாமாத சந்தா பழைய பேப்பர் காசு மாதாந்திர பேப்பர்காரர் பில்.

ஒரு சுபயோக சுப தினம் தொடங்கிஎல்லா பத்திரிகைகளும் வாசகர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, நியூஸ் பிரிண்ட் விலையை மத்திய அரசு ஒரேயடியாக உயர்த்திவிட்டதுமை மற்றும் இதர அச்சு பொருட்கள் விலையும் கூடிவிட்டதால்பத்திரிகையின் விலையை உயர்த்துவதைவிட எங்களுக்கு வேறு வழியே இல்லை” என்று கரம் கூப்பினஅந்த மாதம் பேப்பர்காரர் பில் கொடுத்தபோது வழக்கத்தைவிட அதிகமாகப் பணம் கொடுக்க வேண்டி இருந்தது.

அந்த வார சனியன்று எல்லா பழைய பேப்பர்புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய்ப் போட்டபோதுகடைக்காரர் வழக்கமான ரேட்டிலேயே பணம் கொடுத்தார். “ஏங்கபுஸ்தகமெல்லாம் விலை ஏறிடுச்சேநீங்க ஏன் பழைய பேப்பர் விலைய மட்டும் ஏத்தலையேஎன்று சர்குலேட்டிங் லைப்ரரியின் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுவது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே கேட்டபோதுஅவர், “அதுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லைபழைய பேப்பர் டிமாண்டுக்கு ஏற்பதான் விலை ஏத்துவோம்!” என்றார்.

இது நடந்த ஒருவார காலத்தில்தான் கல்கி ராஜேந்திரனின் உற்சாகமூட்டும் பேச்சைக் கேட்க நேர்ந்ததுஉடனே சிலிர்த்து எழுந்துலயன்ஸ் சங்கத்தில் இருந்த என் மாமாவின் உதவியால் சென்னை மாநகரத்தின் மிகப்பெரிய பழைய பேப்பர் பிசினஸ் மேக்னட்டான எம்.எல்.புஜாரா என்பவரை சந்தித்தேன்.

பத்திரிகைகள் எல்லாம் விலை ஏறிவிட்டாலும்பழைய பேப்பர் விலை ஏறவில்லையேஅப்படி என்றால் பழைய பேப்பர் விலையை நிர்ணயிப்பது யார்?”இதுதான் என் கேள்விகிடைக்கும் பதிலில் ஒரு கட்டுரை என்று தீர்மானம் செய்துவிட்டேன்.

அவர் சொன்னார், ‘பழைய பேப்பர் விலையைத் தீர்மானிப்பது சிவகாசிதான்!’

ஆச்சரியத்துடன் அதெப்படி?” என்று கேட்டேன்பழைய பேப்பர் வியாபாரம் பற்றி புஜாரா விவரமாகப் பேசினார்.

சில சீசன்களில் பழைய பேப்பருக்குத் தேவை அதிகரிக்கும்அப்போது விலை ஏறும்தேவை அதிகமில்லாத சீசன்களில் விலை குறையும்உதாரணமாக சிவகாசிபழைய பேப்பர் விலையை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறதுதீபாவளி சமயத்தில்தான் எல்லோரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம்ஆனால்சிவகாசியில்தீபாவளிக்கான பட்டாசு தயாரிப்பு ஜனவரிபிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிடும்அப்போதிலிருந்தே பழைய பேப்பருக்கு கிராக்கி அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.” என்றார்.

சிவகாசியின் தேவை ஆண்டுக்கு 40 டன் பழைய பேப்பர் என்று அவர் சொன்னது 1980 வருஷக் கணக்குஇப்போது நாலாயிரம் அல்லது நாற்பதாயிரம் டன்னாகக் கூட அதிகரித்திருக்கும்.

தீபாவளிக்கு சுமார் இரண்டு மாதங்கள் முன்பாக பட்டாசு உற்பத்தி அநேகமாக நிறுத்தப்பட்டுபேக் செய்துமற்ற ஊர்களுக்குப் பட்டாசு சரக்கை அனுப்பி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்அப்போது பழைய பேப்பருக்கான தேவை குறையும்அதன் காரணமாகப் பழைய பேப்பர் விலையும் சரியும்ஆகவேபழைய பேப்பர் தேவையைப் பொறுத்தே அதன் விலை ஏறிஇறங்குகிறதே தவிரநியூஸ் பிரிண்ட் விலையின் அடிப்படையில் அல்ல” என விளக்கினார்.

புஜாரா சொன்னதை ஒரு பேட்டிக் கட்டுரையாக எழுதி எடுத்துக் கொண்டுஒரு நாள் மாலை நுங்கம்பாக்கத்திலிருந்து மின்சார ரயில் பிடித்துகிண்டி போய்பொடி நடையாக ரேஸ் கோர்ஸ் சாலையில் நடந்துகல்கி அலுவலகத்துக்குப் போனேன்முதல் மாடிக்கு அனுப்பி வைத்தார் செக்யூரிடிஅங்கே நான் சந்தித்த நபர் குண்டுமணி.

பி.எஸ்மணி எனப் பிரபலமாக அறியப்பட்ட சுப்ரமணியனின் புனைபெயர்தான் குண்டுமணி. கல்கி ஆசிரியர் பிரிவில் பல்லாண்டுகள் பணியாற்றியவர்தமிழ்நாட்டின் சீனியர் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்கிரிக்கெட் சீசனில்சேப்பாக்கம் மைதானமே கதி என்று இருப்பார்அந்தக் காலத்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கர்கபில் தேவ்வெங்கட் ராகவன் எல்லோரும் அவரது தோளில் கை போட்டுக் கொண்டு பேசுமளவுக்கு ரொம்ப நெருக்கமானவர்.

அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுவந்த விஷயத்தைச் சொன்னேன். “உள்ளே எடிட்டர் இருக்கார்அவரையே பார்த்து கொடுத்திடுங்களேன்” என்று அடுத்த அறைக்கு அனுப்பி வைத்தார்.

கல்கி ராஜேந்திரனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுஅவர் எங்கள் கல்லூரிக்கு வந்ததுபேசியது பற்றியெல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு, “எனக்கும் பத்திரிகையாளனாக ஆகவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதுஇதோ நான் எழுதி இருக்கும் ஒரு பேட்டிக் கட்டுரை” என்று சொல்லிஅவரிடம் நீட்டினேன். “படிச்சுப் பார்க்கிறேன்சூட்டபிளா இருந்தா யூஸ் பண்ணிக்கிறேன்” என்று சொன்னார்.

கல்கி அலுவலகம் சென்று கட்டுரையைக் கொடுத்துவிட்டு வந்த இரண்டாம் நாள் காலைவழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்துபேப்பர்காரரது வருகைக்காக ஹாஸ்டல் அறையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஹாஸ்டல் நுழைவுப் பகுதிக்கே வந்துவிட்டேன்பேப்பர்காரர் வந்தவுடன்அவரது சைக்கிள் கேரியரில் இருந்து ஒரு கல்கியை உருவி அவசரம் அவசரமாகப் புரட்டினேன்என் கட்டுரையைக் காணோம்சரியாகப் பார்க்கவில்லையோ என்று மீண்டும் புரட்டியபோதும் ஏமாற்றம்தான்.

அன்று மாலைஹாஸ்டலின் காசு போட்டுப் பேசும் டெலிபோனிலிருந்து கல்கி ஆபீசுக்குப் செய்தேன்குண்டுமணிதான் போனை எடுத்தார்என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “சந்திரமௌலிநீ கொடுத்திட்டுப் போன மேட்டர் அடுத்த இஷ்யூல வருதுய்யா!” என்றார்ஒரு கவலைசடாரென்று மகிழ்ச்சியாக உருமாற்றம் கண்டு உள்ளுக்குள் உருண்டு கூத்தாடத் தொடங்கியது.

வழக்கமாக சுஜாதா போன்றவர்களின் புதிய தொடர் கதை  “அடுத்த இதழில்“ என்ற அறிவிப்பு வெளியானவுடன், ’அரகண்ட நல்லூர் பிரதாப் சிங்’, ’மயிலை கோபி’ போன்ற வாசகர்கள், “அடுத்த இதழ் கல்கியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கடிதம் எழுதுவார்கள்நான் உண்மையிலேயே என்னுடைய கட்டுரைக்காக அடுத்த இதழ் கல்கியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

கல்கியில் அரைப் பக்கமாகச் சுருக்கி வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையையும்இறுதியில் இருந்த பேட்டிஎஸ்சந்திர மௌலி” என்பதையும் திரும்பத் திரும்பப் படித்து சந்தோஷப்பட்டேன்அதற்காக மறுநாள் என் ஹாஸ்டல் முகவரிக்கு ஓர் இலவச இதழ் வந்தபோது சந்தோஷம் இரட்டிப்பானதுஇரண்டு வாரம் கழித்து பதினைந்து ரூபாய் மணி ஆர்டரும் வந்ததுஇன்னமும் பி.எஸ்மணி கையெழுத்திட்ட அந்த மணி ஆர்டர் கூப்பனைத் தூக்கிப் போட மனசில்லாமல் பத்திரமாக பல வருடங்கள் வைத்துக்கொண்டிருந்தேன்.

என் பத்திரிகை உலகப் பயணத்துக்கு என் அந்தக் கட்டுரை பாஸ்போர்ட் என்றால், அந்த மணி ஆர்டர் கூப்பன்  விசா அல்லவா!

(தொடரும்)

1 COMMENT

  1. படித்தேன். சுவைத்தேன். கல்கி அலுவலகத்திற்கே சென்று அதுவும் ஆசிரியர் ராஜேந்திரன் சாரையே சந்தித்தீர்கள் என்பது எழுதுவதில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தின் உச்சத்தை புரிந்து கொள்ள முடிந்தது. பத்திரிகை உலகம் சுவாரசியமானது, ஏதாவது வேலை தேடிக்கொண்டு எழுதுங்கள் என்று சார் கூறியதில் வாசகர், எழுத்தாளர் மீது ராஜேந்திரன் சார் கொண்டுள்ள அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் . தங்கள் பத்திரிகை அனுபவங்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது. காத்திருப்புடன்

    ஆ . மாடக்கண்ணு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...