0,00 INR

No products in the cart.

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

பொலிடிகல் பிஸா

 

– எஸ். சந்திரமௌலி

பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி

ம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப் போட தெலங்கானாவில் போட்டா போட்டி! அண்மையில், தெலங்கானாவில் புதிய கட்சி துவக்கியுள்ள ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர சி.எம். ஜகன் மோகன் ரெட்டியின் அக்காவுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, வரும் தெலங்கானா சட்ட மன்றத் தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் தனக்கு வியூகம் வகுத்துக் கொடுப்பார் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில், தெலங்கானா முதல்வரின் பிரதிநிதிகள், பிரஷாந்த் கிஷோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய செய்தி வெளியானது. ஆட்சியைப் பிடிப்பது யார் என அப்புறம் பார்க்கலாம்! இப்போது பிரஷாந்த் கிஷோரை வளைத்துப் போடப்போவது யார் என்பதுதான் தெலங்கானா தேசத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேள்வி!

நாற்காலி ரேஸ்

த்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கு அடுத்து முதலமைச்சர் நாற்காலிக்கான ரேசில் முன்னணியில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இரண்டுபேர். ஒருவர், கைலாஷ் விஜய்வர்கியா. இவர் தற்போது பா.ஜ.க.வில் தேசிய பொதுச்செயளாலராக இருக்கிறார். இன்னொருவர் ம.பி.யின் தற்போதைய உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா. இவர்கள் தங்கள் பாபுலாரிடியைக் காட்ட தங்கள்  ஸ்டைலில் ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்தூரில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கைலாஷ்,  48 வினாடிகளில் 60 தண்டால் எடுத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.  சும்மா இருப்பாரா நரோத்தம்?  தன் தொகுதியில் நடந்த லோக்கல் கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைத்தபோது, தனக்கும் கிரிக்கெட் ஆடத் தெரியும் என்று சொல்லி, மட்டையுடன் களமிறங்கி, நாலும், ஆறுமாக விளாசித்தள்ளினார். இந்த இரண்டும் சமூக ஊடங்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, இருவருக்கும் இடையில், புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. “நீயா? நானா?” சபாஷ் சரியான போட்டிதான்!

அமேதி மீது மீண்டும் ராகுல் பார்வை

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் அமேதி தொகுதியில் தோல்விகண்ட ராகுல், தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது தடவையாக அண்மையில் அக்கா பிரியங்காவுடன் அமேதிக்கு ஒரு விசிட் அடித்தார். “2024 எம்.பி.தேர்தலில் ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிடும் ஐடியாவில் இருக்கிறார். ஆகவேதான் இந்த விசிட்!”  என்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள். ஆனால் டெல்லி வட்டாரத்திலோ, ‘ராகுல் அமேதியில் போட்டியிடுவது நிச்சயமில்லை; உடல்நலம் காரணமாக சோனியா வரும் தேர்தலில் போட்டியிடாமல் போனால், ராகுல் தற்போதைய சோனியா தொகுதியான ரேபரேலியில் போட்டியிடுவார்’ என்று காதைக் கடிக்கிறார்கள். ராகுல் அமேதிக்குப் போனால், ஸ்மிதி இரானியும் அங்கேதான் களமிறங்குவாரோ?

பதில் வருமா?

பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் பற்றி சம்மந்தப்பட்டவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பி, அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் மனம் நொந்து போவது வாடிக்கைதான்! ஆனால், ஒரு முன்னாள் முதலமைச்சர், தற்போதைய முக்கியமான எதிர்க் கட்சித் தலைவர் இதுவரை பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து முதலமைச்சருக்கு 200க்கும் அதிகாமான கடிதங்கள் எழுதியும், ஒன்றுக்குக் கூட இதுவரை பதில் வரவில்லையாம்! யாரந்த சாதனை முதல்வர்? மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேதான்! அவருக்குக் கடிதம் எழுதியவர் பா.ஜ.க.வின் தேவேந்திர ஃபட்னாவிஸ்! நம்ம தளபதி மாதிரி தனி டிபார்ட்மென்ட் போடுங்க பாஸ்!

பேரணிக்குப் போன ஆசிரியர்கள்!

கொரோனாவுக்காக மூடிய பள்ளிகள் திறக்கப்பட்டும், அண்மையில், `திடீரென உ.பி.யில் கொரக்பூர் மாவட்டத்தில் மூன்று பஞ்சாயத்து ஒன்றியங்களில் உள்ள  ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் லீவு விடப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரையும் பஸ் வைத்து அழைத்துக் கொண்டு போய், பிரதமர் பங்கேற்ற பேரணியில் கலந்துகொள்ளச் செய்தார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளன. நம் ஊர் கலாசாரப்படி ஆசிரியர்களுக்கு பிரியாணிப் பொட்டலமும் இன்ன பிறவும் கொடுத்தார்களா இல்லை சும்மா
ஆன் டியூட்டிதானா?

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

விற்பதற்கல்ல! விதைக்காக

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திரமௌலி   கேட்பீர்களா? கேட்பீர்களா? பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் இந்தி, ஆங்கிலம் என்று பொளந்து கட்டுகிறார். ஆனால், தன் தாய்மண்ணுக்கு...

ஒரு  தேசியின் டைரி குறிப்பு

சுஜாதா தேசிகன்                          டைரி எழுதும் பழக்கம் எனக்கு (இதுவரை) இல்லை. நேற்று என் மனைவி எதையோ தேடும்போது “நீங்கள்...

கிருஷ்ணரிடம் சில கேள்விகள்

2
டி.வி ராதாகிருஷ்ணன்   36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய ...

காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.

2
முகநூல் பக்கம்   கிராமத்தில் என் நிலங்களை ஆக்கிரமித்து ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அட்டகாசம் செய்தபோது, நான் வாட்ஸ் அப்பில் டிஜிபி திரு.திருபாதி அவர்களுக்கு புகார் மனு அனுப்பி வைத்தேன். உடனே புகார் மனுவின் பேரில்...

ஆபாச நகைச்சுவைகள், அருவருப்பான காதல் டூயட் காட்சிகள் இல்லாதிருப்பது பெறும் ஆறுதல்

1
விமர்சனம் - லதானந்த்   காவல் நிலையத்தில் ரைட்டர் பதவி பணிபுரியும் சராசரி மனிதரின் வாழ்க்கைச் சூழலைச் சொல்வதோடு, செய்யாத தவறுக்காகக் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி இளைஞன் ஒருவன் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்வதுதான் படத்தின் ஒன்லைன். உபரியாகக்...