இந்த வருட இசை விழாவில் இது புதுசு!

இந்த வருட இசை விழாவில் இது புதுசு!

சினிமா டிக்கெட் போல இந்த வருட இசைவிழாவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் சௌகரியம் வந்துவிட்டது. சென்னையின் இசைவிழா கச்சேரிகளுக்கான   டிக்கெட் வாங்கிக் கொடுக்கும் சேவையை முதன் முதலில் துவக்கிய பெருமை சென்னையில் இருக்கும் “மியூசிக் ஆஃப் மெட்ராஸ்” நிறுவனத்துக்கே உரியது. இந்த வருடத்து சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளுக்கு  இவர்களின் இணையதளம் மூலமாகவே  டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.  

வலுவான தொழில்நுட்பத் திறன்  மற்றும் கடந்த ஐந்தாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில்  இந்த நிறுவனம் www.mdnd.in என்ற தனது  வலைத்தளத்தை இந்திய கலைகளுக்கான உலகளாவிய தளமாக உருவாக்கியுள்ளது.

இந்த வருட இசைவிழாவுக்கான நுழைவுச் சீட்டு சேவையை வழங்குவதற்காக  மியூசிக் ஆஃப் மெட்ராஸ் நிறுவனம் சென்னை மாநகரின்  பிரம்ம கான  சபா,  கர்நாடிகா, ஹம்சத்வானி, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி,  கலாக்ஷேத்ரா, கலாலயா அறக்கட்டளை, (அமெரிக்கா), கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், மெட்ரசனா,  மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, நாரத கான சபா,   ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா ஆகிய சென்னையின் முக்கிய சபாக்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரசிகர்கள் தங்கள் கணினிகள் அல்லது ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தி www.mdnd.in    என்ற இணையதளத்துக்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள  “சீசன் டிக்கெட்ஸ்” என்ற பகுதிக்குச் சென்று சபாக்களின் பட்டியலைக் காணலாம். ரசிகர்கள் ஒவ்வொரு சபாவின் கீழும் சீசன் டிக்கெட்டுகள் அல்லது தனிப்பட்ட கச்சேரிக்கான  டிக்கெட்டுகளைத் தங்கள் விருப்பத்துக்கேற்ப  தேர்வு செய்து, சைபர்-பாதுகாப்பான சூழலில் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

கச்சேரிக்கு வரும் ரசிகர்கள் கேண்டீனிலும் ருசிக்க இதே இணையதளம் மூலமாக வழி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள், சாஸ்தாலயா மற்றும் சாஸ்தா கேட்ரிங் சர்வீஸ் ஆகிய  கேண்டீன்களில்  உணவுக்கான டோக்கன்களையும் ஆன்லைன் மூலமாக வாங்க முடியும்.

 மேலும் உதவிக்கு,  ரசிகர்கள் வாட்ஸ்அப் மூலம்  'ஹாய்'  என்று 8072 336688  எண்ணுக்கு அனுப்பலாம்.  events@mdnd.in க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸ்அப்  எண்கள் 9940152520 / 9841088390 களைத் தொடர்பு கொள்ளலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com