மீண்டும் அமேதியில்  போட்டியிடுவாரா ராகுல்?

மீண்டும் அமேதியில்  போட்டியிடுவாரா ராகுல்?

டந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கே அமேதி, தெற்கே வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் மண்ணைக் கவ்வினார். அவரைத் தோற்கடித்தவர் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி.

மீண்டும் ஸ்மிருதி இரானி அமேதியில்தான் போட்டி இடுவார் என்பதால், அவர் தன் தொகுதியை நன்றாக கவனித்து வருகிறார்.

ஆனால், “மறுபடியும் அமேதியில் போட்டியிடுவாரா ராகுல்” என்ற கேள்வி எழுந்துள்ளது. “நேரு குடும்பத்து பாரம்பரிய தொகுதி அமேதி” என்று சொல்லி, “அங்கே மீண்டும் ராகுல் போட்டியிட்டே ஆகவேண்டும்” என்று சில காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் சொல்லி வருகிறார்கள். அவரும் அதன்படி அங்கே போட்டியிடத் தயாராகி வருகிறார்.

அண்மையில்” அமேதி தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து வரவேண்டும்” என்று ராகுல் கருத்து தெரிவிக்க, அதன் முதல் கட்டமாக அமேதி தொகுதியில் காங்கிரஸ் செயல்வீரர்களின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடானது.

உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிரிஜ்லால் கப்ரி அண்மையில் அமேதிக்குப் போனார். பாதி கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  தான் ராஜினாமா செய்வதாய் அறிவித்தார்.

உ.பி. காங்க். கமிட்டி தலைவரும், சரி, உள்ளூர் தலைவர்களும் சரி என் பேச்சைக் கேட்பதில்லை; அப்புறம் நான் எதற்கு மாவட்ட தலைவராக இருக்க வேண்டும்? என்பது அவரது கேள்வி.

“அமேதியில் நடந்த இந்த சலசலப்பு, மாநிலமெங்கும் இருக்கும்  நிலைமையின் ஒரு ஐஸ் கட்டியின் முனைதான்” மாநில அரசியலில் அகிலேஷ் ஒருவர்தான் ஆக்டிவாக இருக்கிறார். மாயவதியும், காங்கிரசும் டம்மி பீஸ் ஆகிவிட்டார்கள்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் உள்ளூர் அரசியல் வட்டத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com