பந்துகள் உணர்த்தும் பருவங்கள்!

பந்துகள் உணர்த்தும் பருவங்கள்!

வாழ்க்கையின் மாறும் பருவங்களுக்கேற்ப – அதாவது, 20 வயது முதல் 80 வயது வரை வேவ்வேறு விளையாட்டுப் பந்துகள் உதாரணமாக இருக்கின்றன.
எப்படி என்று பார்ப்போமா?

20 முதல் 30 வயது வரை

திகமாக அலட்டிக்கொள்ளாமல் அங்குமிங்கும் டக்-டக்கென துள்ளுவதோடு சிரமமின்றி பறக்கும். அடிபட்டாலும் மீண்டும் எழும். மனமும், உடலும் உற்சாகத்துடன் விளையாடும். இளமையான ‘டென்னிஸ் பந்து’ (Tennis Ball) பருவம்.

31 முதல் 40 வயது வரை

சில நேரங்களில் சிக்ஸர், சில சமயங்களில் ஃபோர் மற்றும் ‘டக்’ அடிப்பது த்ரில்லிங்காக இருக்கும். திருமண வாழ்வில் வெற்றி – தோல்வி அறிவது; செட்டில் ஆவதுவரை ‘கிரிக்கெட் பந்து’ (Cricket Ball) பருவம்தான்.

41 முதல் 50 வயது வரை

ரளவு செட்டிலான குடும்பம். நல்லதொரு நிலைமையில் வாழ்க்கைப் படகு ஓடும் நேரமிது. வீட்டினர், உற்றார் – உறவினர், நண்பர்கள் அனைவரையும் பெருமையுடன் பார்க்கும்.  பாதுகாப்பான பையினுள் இருக்கும் ‘பாஸ்கெட் பந்து’ (Basket Ball) பருவமிது.

51 முதல் 60 வயது வரை

ணி ஓய்வு நெருங்கும் நேரம். பொறுப்புக்கைள முடிக்க மனம் அறிவுறுத்தும். வீட்டினர் பேச்சைத் தாண்டியும் சில சமயங்களில் வேலைக்குச் செல்லத் தூண்டும். அநேகர் ‘தன் கையே தனக்குதவி’யென செயல்படுவதும், பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வதுமாக செயல்படுவதுண்டு. இது ‘கைப்பந்து’ (Volley Ball) பருவமாகும்.

61 முதல் 70 வயது வரை        

டல் கோளாறுகள் மெல்ல – மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கும். வேலை செய்ய இயலாமல் உடலும், உள்ளமும் சோர்ந்து போகும். வெளிநாட்டில் வசிக்கும் பையனிடம் சென்று தங்க முடியாது. முதியோர் இல்லம் செல்ல மனம் இடம் தராது. அந்தப் பையன் வீட்டில் 6 மாதம்; இந்தப் பையன் வீட்டில் 6 மாதமென இங்குமங்கும் பந்தாட வேண்டிய ‘கால் பந்து’ (Foot Ball) பருவமெனப்படுவது இதுதான்.

71 முதல் 80 வயது வரை

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து தனியே செயல்பட்டாலும், வெளியில் நன்றாகப் பேசினாலும், மனதினுள் ஒருவித பாதுகாப்பின்மையும் பயமும் இருக்கத்தான் செய்கிறது இந்த வயதில்! வசதி இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் இதே நிலைமைதான். எப்போது இந்த வாழ்வு முடிந்து குழிக்கள் செல்லலாம் என்கிற எண்ணம் ஏற்படும் இந்த ‘கோல்ஃப் பந்து (Golf Ball) பருவத்தில்தான்.

பருவங்களுக்கேற்ப டென்ஷன் வேறுபடும். டென்ஷன் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

இவைகளை எதிர்கொள்ள

60 வயது முதல் 65 வயதுவரை உள்ள வாழ்க்கையை தங்களுக்காகவும், குடும்பத்தினருக்காகவும், தான – தர்மங்கள் செய்வதற்காகவும் செலவிடுவது மிகவும் அவசியம். தன்னையும் வருத்தி, பிறரையும் வருத்தும் வாழ்க்கைத் தவிர்க்கப்பட வேண்டும்.

கூடிய மட்டும் அன்பாகப் பேசி பழகுதல்; தேவையற்ற செயல்களைத் தவிர்த்தல்; ஆரோக்கியம் பாதுகாத்தல் ஆகியவைகளைக் கடைப்பிடித்து வந்தால், எல்லாப் பருவங்களிலும் நிம்மதியும் மகிழ்வும் நிச்சயம். “எதைக் கொண்டு வந்தோம்? – கொண்டு செல்ல?’

‘அன்பாகப் பழகி,

தரவாய் இருந்து,

னியவை பேசி,

கை அளித்து,

த்தமமான உள்ளத்துடன்

ருக்கு உதவி,

ளிய வாழ்வினை

ற்றமுடன் வாழ்ந்து,

யமின்றி செயல்பட்டு,

ருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து,

ட்டத்தை சற்றே நிறுத்தி,

டதமாய் அனைவருக்கும் விளங்கி

அனைத்து பந்து பருவங்களையும்

அழகாக எதிர்கொள்ளுங்க!

ஆரோக்கியமாய் வாழுங்க!’

(அநாவசியத்துக்கு அலட்டாதீங்க!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com