இவரைப் போல் எவரும் இல்லை!

இவரைப் போல் எவரும் இல்லை!

இவரைப் போல் எவரும் இல்லை!

 • மூன்றெழுத்தில் நிலைத்து நிற்கும் பெயரைக் கேட்டால்
  முத்தமிழும்; எம்.ஜி.ஆர். என்றே சொல்லும்!

 • நான் என்ற எண்ணமென்றும் வாழ்ந்ததில்லை!
  நாட்டிலுள்ள மக்களெல்லாம் நவில வைத்தார்!

 • பொன்மனச்செம்மல் என்றே போற்றப்பட்டார்!
  பொற்காலம் தமிழகத்தில் பொழிய செய்தார்!

 • மக்கள்தம் உள்ளத்தில் நிலைத்து நின்று
  மக்களாலே திலகமாக ஏற்கப்பட்டார்!

 • திக்கெட்டும் சத்துணவு திட்டம் போட்டு
  திக்கற்ற மாணவர்கள் பயில வைத்தார்!

 • தக்கதொரு திட்டமாக தெலுங்கு கங்கை
  தண்ணீரைக் கொண்டுவந்து தாகம் தீர்த்தார்!

பிள்ளை படம்
பிள்ளை படம்
 • கடைஏழு வள்ளல்கள் கற்ற றிந்தோம்
  கண்முன்னே சாட்சியான வள்ளல் எம்.ஜி.ஆர்

 • மடைதிறந்த வெள்ளமென வழங்கி வாழ்ந்தார்!
   மக்களெல்லாம் மகிழுறவே மாட்சி பெற்றார்!

 • நடைபாதை வாழ்வோரும் நன்றி சொல்வார்
  நன்மைமிகு திட்டங்கள் பெற்றதாலே! 

 • ஏழ்மையிலே பிறந்துதித்த ஏந்தல் எம்.ஜி.ஆர்.
  ஏழ்மைக்கே தம்கரத்தால் ஏழ்மை தந்தார்!

 • வீழ்த்திடவே எண்ணியோரை வீழ்த்தி வென்றார்!
  வீழ்ந்தோரும் தாள்பணிய வணங்கி ஏற்றார்!

 • தாழ்ந்தோரை தலைநிமிர்ந்து நடக்க வைத்தார்!
  தன்மானம் பெரிதென்றும் புரிய வைத்தார்!

 • மதுவை தொட்டதும்இல்லை! மறந்தும் கூட!
  மாதரையும் போற்றித்தான் காட்சி வைத்தார்!

 • மதுரையென்றால் முத்தமிழே மாட்சி செய்யும்!;
  மாசில்லா கண்ணகியால் மதிப்பும் ஓங்கும்

 • இதுவரையில் இவரைப்போல் எவரும் இல்லை!
  இனிமேலும் வருவதாக தோன்றவில்லை!

 • சரிசமமாய் அனைவரையும் பார்த்த வள்ளல்!
   சாதிமத வேறுபாடு அறியா ஏந்தல்;!

 • சரியாத புகழுக்கு சான்றாய் வாழ்ந்தார்
  சரித்திரத்தில் கல்வெட்டாய் நிலைத்து விட்டார்!

 • இரத்தத்தின் இரத்தமான தொண்டர் கொண்டார்.
   என்றென்றும எம்.ஜி.ஆர் நினைவில் நிற்பார்!

 • மதிநுட்பம் கொண்டோரைத் துணையாய்க் கொண்டு
  மக்களாட்சி சிறப்புறவே மலர வைத்தார்!

 • எத்திக்கும் அவர்பெயரும் நிலைத்து நிற்க
  ஏற்றதொரு பட்டமன்றோ பாரத் ரத்னா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com