விருந்திற்கான அழைப்பும் காமராஜரின் மறுப்பும்!

விருந்திற்கான அழைப்பும் காமராஜரின் மறுப்பும்!

எம்ஜிஆர்க்கு உள்ள தனிப்பட்ட  சிறப்பு என்னவென்றால்,  தன்னை போற்றுவோருக்கு மட்டுமின்றி தன்னை கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப்போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

இன்று  பல கலைத்துறை வல்லுனர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதே அவரது கொடைத்தன்மைதான். கொடுத்து கொடுத்து சிவந்தன கைகள் அவருடையது.  இல்லை என்பதே அவரிடம் என்றும் இல்லை. 

பிறந்தது 17.1.17 முதல் 24.12.87 வரை அவர் வாழ்ந்த இந்த 70 ஆண்டு காலம் ஒரு புரட்சி காலமாக அமைந்தது. அவரைப்போல் இதுவரை ஒருவரும் பிறந்ததும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை. சாதிக்க வந்தார் சாதனை புரிந்தார்.

படம் பிள்ளை
படம் பிள்ளை

நாட்டில் இருந்துகொண்டே ஆட்சி புரிய திண்டாடும் முதலமைச்சர்கள் இருக்கையில், அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்து கொண்டிருக்கும் பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே முதலமைச்சர் எம்ஜிஆர்தான் என்றால் அது மிகையாகாது.

 இப்படிப்பட்ட தலைவர் இலங்கையில் பிறந்த போதும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பெரும் புகழ்  நம் நாட்டையே சாரும். அவர் ஆணையிட்டார் அது நடந்தது.  ஏழைகளின் வேதனையை நீக்கினார். அவர்களது கண்ணீரையும் அடிமைத்தனத்தையும்  போக்கினார். தன்னை அறிந்தார்.  உலகத்தில் போராடினார் . தலை வணங்காமல் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று பின்பற்றி வாழ்ந்த ஒரே முதலமைச்சர் எம்ஜிஆர் ஆவார்.

தான் நினைத்ததை தன் கண் முன் நிறைவேறச் செய்தார்.

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர் அவர்கள். காமராஜர் அவர்களை  ஒரே ஒரு முறையாவது அவரது இல்லத்திற்கு அழைத்து விருந்தளிக்க வேண்டும் என்பது  எம்ஜிஆர் அவர்களின் விருப்பம்.

ஆனால், எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடியே "சொல்கிறேன்" என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து வடுவார்.

ஒருமுறை சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பங்குபெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.  காமராஜரை வழி அனுப்பும்போது மீண்டும் அழைப்பு கொடுத்தார்  எம்.ஜி.ஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.  நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, கொஞ்சம் தயிர் சாதம்தான் எனக்குச் சரிபடும். உன் வீட்டில் அறுசுவை விருந்து சாப்பிட்டு விட்டால் மீண்டும் அந்த ருசியை நாக்கு தேடும். அதற்கு நான் எங்கே போவேன்?” என்று காமராஜர் கூற, அதனைக் கேட்டு ஆடிப்போன  எம்ஜிஆர் தன்னையும் அறியாமல் இரு கை கூப்பி வணங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com