செளமியா சுப்ரமணியன்
என் பெயர் சௌமியா சுப்பிரமணியன். பள்ளி கல்லூரி படித்து முடித்து திருமணமாகி, என் கணவர் , மற்றும் இரண்டு மகன்கள், தாயார், என் அண்ணன், என் மற்றும் மாமியார் என அனைவரும் ஒன்றாக சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் விதவிதமாக சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது.
இது தவிர சமையல் குறிப்பு, கவிதை, சிறுகதை துணுக்கு எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது , தோட்டத்தை பராமரிப்பது எனது பொழுதுபோக்கு.
வீட்டு வேலைகளை நானே செய்வதோடு, எனது தாயார் மற்றும் மாமியாரை கவணமாக பார்த்துக்கொள்கிறேன்.
மேலும் எங்கள் வீட்டு செல்லப்பிராணியாகிய "ஆஸ்கர்" மற்றும் "அதீனா" என்கிற இரு நாய்குட்டிகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடுவதும், என் வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்து ரசிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது.