நல்லுறவு பேணும் நயமான பண்பாடு

நல்லுறவு பேணும் நயமான பண்பாடு
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ராஜன், ஸ்திரேலியாவிலிருந்து...

ஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) அவர்கள் இங்கு வாழும் நமது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் நவராத்திரி வாழ்த்து அனுப்பி இருக்கிறார்.



இது ஒரு மிகச் சிறந்த, நல்லுறவு பேணும் நயமான பண்பாடு.

இங்குள்ள ஒவ்வொரு தொகுதி MP யும் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு அழகான வண்ண வாழ்த்து மடலை இங்குள்ள இந்தியர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபாலில் அனுப்புகிறார்கள்.

59 வயதான அந்தோணி அல்பானீஸ், நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1996 வாக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார்.

இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் 31-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சியை சார்ந்தவர்.

இவர் எளிய பின்புலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்திலேயே முதன் முதலாக பள்ளிக்கூடம் சென்றவர் இவர்தான். வாழ்வில் படிப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தியவர்.

-

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com