இத்தாலியின் மிகவும் பழமை வாய்ந்த நகரமான Pompeii-ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லறை மற்றும் ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக, இது அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை அறிந்துக்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியின் பழமைவாய்ந்த நகரமாக கருதப்படும் இந்த Pompeii, 70 AD காலத்தில் வெஸுவியல் எரிமலையின் வெடிப்பின் காரணமாக முற்றிலும் அழிந்துவிட்டது. அந்தவகையில் சமீபக்காலமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியில் ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்தநிலையில் தற்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கல்லறை என்பது இறந்த மனிதர்களின் உடம்பை புதைப்பதற்கு மட்டுமல்ல, அப்போதைய அடையாளங்களை சேகரித்து, எதிர்காலத்தில் வாழும் மக்களுக்கு காண்பிப்பதற்கும்தான். அந்தக் கல்லறையில் அவர்களுடன் அவர்களுடைய பொருட்களும் சேர்த்து வைக்கப்படும். அதுவே எதிர்காலத்தில் வாழ்பவர்களுக்கு அன்றைய நாகரீகத்தை எடுத்துச் சொல்லும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
இந்தநிலையில்தான், செர்பரஸ் (Cerberus) கல்லறை என்றழைக்கப்படும் இந்தக் கல்லறையில், பண்டைய கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்பட்ட Cerberus ( மூன்று தலை கொண்ட நாய்) சுவர் ஓவியம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்குக் கீழ் உள்ள இந்த அறையை, அருகில் உள்ள ஒரு வயலில் ரோமானிய கட்டுமானம் பற்றி ஆராய்ச்சி செய்யும்போதுதான் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இந்தப் பகுதியில் காலத்தால் புதைக்கப்பட்ட ஏராளமான இடங்களைக் கண்டறிந்துள்ளனர். அதில் கிமு 510 – 531 ஐ சேர்ந்த சில இடங்களும், கிமு 31 – கிபி 476 ஐ சேர்ந்த ரோமானிய ஏகாதிபதியத்தின் சில இடங்களும் அடங்கும்.
இப்போது கண்டறியப்பட்ட இந்தக் கல்லறையில் ஏராளமான சுவரோவியங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இதில் செர்பரஸ் ஓவியத்தைத் தவிர ஹெர்குலிஸ் என்ற கடவுள் உருவம் கொண்ட ஓவியமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரேக்க புராண கதைகளின் படி, பாதாள லோகத்தை காத்துவந்த மூன்று தலை கொண்ட நாயை ( செர்பரஸ்) கொல்ல, கிரேக்க கடவுளான ஹெர்குலிஸ் பாதாள லோகத்திற்குச் சென்றார். அவர்களின் வித்தியாசமான ஓவியங்களும் அங்கு காணப்பட்டன.
ஆராய்ச்சியாளர்கள் 'ஓபஸ் இன்செர்டம்' எனப்படும் கட்டுமான நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட பண்டைய ரோமானிய சுவரைக் கண்டுப்பிடிக்கும்போது இந்த கல்லறை மற்றும் ஓவியங்கள் ஆகி்யவையும் பிடிக்கப்பட்டன.
இதனையடுத்து தொல்பொருள் ஆய்வாளர் Chris Dunn கூறுகையில், " மூன்றாவது பெரிய நகரமான இங்கு, இன்னும் எவ்வளவோ விஷயங்கள் புதைந்து இருக்கின்றன. இங்குத் தோண்ட தோண்ட பல ஆச்சரியமான விஷயங்கள் கிடைக்கும். சில ஆண்டுக்காலமாக ஏராளமான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அதேபோல் கிடைத்த ஓவியங்கள், கல்லறைகள் ஆகியவற்றை பாதுகாப்பதும் அவசியம்."