1000 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட வேட்பாளரின் தகுதிகள் என்ன தெரியுமா?

Do you know the qualifications of a candidate to contest an election 1000 years ago?
Do you know the qualifications of a candidate to contest an election 1000 years ago?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு ஊர் ஆகும். இது பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர், விஜயநகர அரசர்கள், நாயக்கர்களால் பல்வேறு காலகட்டங்களில் ஆளப்பட்டுள்ளது. இந்த ஊரில் பல்லவர் மற்றும் சோழர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் ஏராளமாக உள்ளன. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க அற்புதமான கோயில்களும் இங்கு நிறைய அமைந்துள்ளன.

உத்திரமேரூரில் ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயிலில் உள்ள சோழர் காலத்தியக் கல்வெட்டுக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்களாட்சி தேர்தல் முறை நடைமுறையில் இருந்ததைத் தெரிவிக்கின்றன.

கி.பி. பத்தாம் நுாற்றாண்டில் இப்பகுதியில் ஆட்சி புரிந்த முதலாம் பராந்தக சோழ மன்னரின் ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி தத்துவத்தை போற்றும் வகையில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடவோலை முறை என்ற ஒரு முறையின் மூலமாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் முறை இக்கோயிலின் கல்வெட்டுக்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பொருள், பொன், ஏரி, தோட்டம் போன்ற நிர்வாகத்திற்கு தனித்தனியான வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரியங்களை நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய மக்களாட்சி தேர்தல் முறை கி.பி. 919ல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தற்போதும் காணலாம்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் சமரசங்கள் மிகவும் முக்கியம்!
Do you know the qualifications of a candidate to contest an election 1000 years ago?

தகுதியான நபர்களை போட்டியிடத் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை பனையோலையில் எழுதி அவற்றை ஒரு குடத்தில் இட்டு ஒரு சிறுவன் மூலம் ஒரு ஓலையை எடுக்கச் செய்து அந்த ஓலையில் இருக்கும் பெயரை உடைய நபரை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்து அறிவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முறைக்கு குடவோலை முறை என்று பெயர் வழங்கப்பட்டது.

இக்கோயில் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com