இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க மோதிரம்!

Gold Ring
Gold Ring

இஸ்ரேலின் ஜெருசேலம் பகுதியில் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க மோதிரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மோதிரத்தை வைத்து ஜெருசேலமில் உள்ள பண்டைய கால மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

டேவிட் தொல்பொருள் ஆராய்ச்சி பூங்கா என்ற தளத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது Hellenistic period காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுமியின் மோதிரத்தை கண்டுபிடித்துள்ளனர். Hellenistic period என்பது மத்திய கிழக்குப் பகுதியில் கிமு 323 அலெக்ஸாண்டர் தி கிரேட் இறந்ததற்கு முன்னும், ரோம் எகிப்தை கைப்பற்றுவதற்கு முன்னும் (கிலியோப்பட்ரா 7 இறந்ததற்கும் முன்) இருந்த காலகட்டமாகும். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட மோதிரமும் Hellenistic ஸ்டைலில்தான் உள்ளது. ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் Hellenistic காலகட்டத்தில் கிழக்கு மெடிட்டேர்ரியனுடைய ஸ்டைலும் பரவலாக இருந்ததாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்த Tehiya Gangate என்ற தொல்லியல் ஆராய்ச்சியாளர் கூறியதாவது, “நான் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது, எதோ மினுமினுப்பது போல் உணர்ந்தேன். சட்டென்று அந்த இடத்தைப் பார்க்கையில் பச்சை நிற கல்லுடன் இருந்தத் தங்க மோதிரத்தைக் கண்டேன். பிறகு நான் ஒரு மோதிரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்தியதும், சுற்றியிருந்த அனைவரும் கூடிவிட்டார்கள்.

Gold Ring and David Archeological site
Gold Ring and David Archeological site

எப்போதும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டாது. இது மிகவும் எனக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று. ஏனெனில், பண்டைய கால தங்க மோதிரத்தைக் கண்டெடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு நினைவாகியுள்ளது. ஒரு வாரம் முன்னர்தான் மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பினேன்.” என்றார்.

ஜெருசேலம் என்பது மிகவும் சிறிய பகுதியாகும். ஆனால், அங்குதான் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இப்போதுள்ள டேவிட் தொல்லியல் ஆராய்ச்சி மையமானது, முன் ஓர் காலத்தில்  டேவிட் என்ற அரசர் உருவாக்கிய நகரமாகும். மேலும் இந்த டேவிட் நகரம் ஜெருசேலத்தின் தெற்கு பகுதியில், அதாவது மிகப்பழமையான ஜெருசேலம் என்றழைக்கப்படும் இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
Yasuke: வரலாற்றின் ஒரே ஆஃப்ரிக்கன் சாமுராய்… அடிமையிலிருந்து சாமுராயான கதை!
Gold Ring

இந்த டேவிட் பார்க் பகுதியில் Hezekiah's சுரங்கப்பாதையை Hezekiah என்ற மன்னரே உருவாக்கினார். இன்னும் ஏராளமான ஆராய்ச்சித் தளங்கள் ஜெருசேலம் பகுதியில் உள்ளன. அந்தப் பகுதிகளை சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து சுற்றிப்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் பச்சை கல் வைத்த மோதிரத்தை ஜெருசேலத்தில் ஒரு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com