‘கோஹினூர் வைரம்’ என்றதும், பிரிட்டீஷார் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற மிகவும் விலையுயர்ந்த வைரம் என்பதுதான் நினைவிற்கு வரும். ஆனால், அதையும் தாண்டி பல விலையுயர்ந்த பொருட்களையும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். அத்தகைய 4 பொருட்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Maharaja Ranjit singh's golden throne: சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் முழுக்க முழுக்க தங்கத்தினால் செய்யப்பட்ட தாமரை வடிவிலான அரியாசனத்தை பொற்கொல்லரான Hafez Muhammad multani 1820 முதல் 1830ல் உருவாக்கினார். இதை 1849ம் ஆண்டு பிரிட்டீஷார் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தற்போது இங்கிலாந்தில் உள்ள பிரிட்டீஸ் மியூசியத்தில் இருக்கிறது.
2. Wine cup of shahjahan: ஷாஜஹானின் ஒயின் கோப்பை, ‘ஜேட்’ என்று சொல்லப்படும் விலை மதிப்புள்ள கல்லில் செய்யப்பட்டது. இந்தக் கோப்பை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ஆட்டுடைய தலை, இலை போன்ற வடிவத்தில், தாமரை மலர் என்று பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடு செய்யப்பட்டிருக்கும். இந்தக் கோப்பையை 1962ம் ஆண்டு ஆங்கிலேயர் கொள்ளையடித்து சென்று பிரிட்டீஷ் மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.
3. Tippu sultan's tiger doll: திப்பு சுல்தானின் இந்த புலி பொம்மை மரத்தால் செய்யப்பட்ட ஒரு ஆட்டோமேட்டிக் பொம்மையாகும். இந்த புலி பொம்மை ஒரு ஆங்கிலேயரை கடித்தும குதறுவது போல வடிவமைத்துள்ளார்கள். இதில் உள்ள சாவி போன்ற அமைப்பை சுழற்றும்போது ஆங்கிலேயரின் ஒரு கை மட்டும் அசையும் மற்றும் அந்த மனிதன் ஓலமிடும் சத்தமும், புலியின் கர்ஜனை சத்தமும் கேட்கும் வண்ணம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் இறந்த பிறகு இதை கொள்ளையடித்துச் சென்று பிரிட்டீஸ் மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், திப்பு சுல்தானின் வாள், மோதிரம், வாசனை திரவியம் என்று சிலதையும் சேகரித்து வைத்துள்ளனர்.
4. Lord Harihara idol: சிவபெருமானும், பெருமாளும் சேர்ந்து அசுரனான குகாசுரனை அழிக்க எடுத்த புதிய அவதாரமே ஹரிஹர அவதாரம் ஆகும். அத்தகைய அழகிய மணற்கல்லால் ஆன நுணுக்கமான வேலைப்பாடுகளுடைய ஹரிஹர சிலையை மத்தியபிரதேசத்தில் உள்ள Khajuraho கோயிலில் இருந்து கொள்ளையடித்துச் சென்று பிரிட்டீஸ் மியூசியத்தில் வைத்துள்ளனர். இந்த 4 விலை மதிப்பில்லாத பொருட்களில் எது உங்களைக் கவர்ந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.