Good girl syndrome
Good girl syndromeImage Credits: India.Com

பெண்களே, ‘Good girl syndrome’ என்றால் என்னவென்று தெரியுமா?

Published on

ந்த சமூகத்தில், பெண்கள் எப்போதும் பணிவாகவும், சுயநலமற்றவராகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார்கள். இதனால் தனக்கான தேவைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை விட, அடுத்தவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். People Pleaser ஆக இருப்பார்கள் மற்றவர்கள் தன்னைக் குறைக் கூறி விடக்கூடாது என்று பயப்படுவார்கள். இதையே, ‘Good girl syndrome’ என்று கூறுகிறோம். ‘Good girl syndrome’ பிரச்னையிலிருந்து வெளிவந்து, பெண்கள் எப்படி தங்களை சுயமாக முன்னேற்றிக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

இந்த சமூகமும், குடும்பமும் பெண் பிள்ளைகளை வளர்க்கும் காலக்கட்டத்திலிருந்தே நல்ல பிள்ளைகளாக இருந்தால்தான் நல்ல கணவன், நல்ல வாழ்க்கை, நல்ல குடும்பம் அமையும் என்று நம்ப வைத்து விட்டார்கள். இதனால், பெண்கள் அந்த ‘நல்ல பெண்’ என்ற இமேஜ்ஜிற்குள் தன்னை பொருத்திக்கொள்ள தனது வாழ்நாள் முழுவதுமே போராடுகிறார்கள்.

அடுத்தவர்களுக்கு ஒரு விஷயம் நல்லதா? என்று யோசிப்பீர்கள். ஆனால், உங்களுக்கு எது தேவை, உங்களுக்கு எது நல்லது என்பதைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள்.

உங்களால் சுலபமாக அடுத்தவர்களிடம் ' No' சொல்ல முடியாது. உங்களுக்குக் கோபம் வந்தால் அதை தடுத்துவிடுவீர்கள். உங்களுக்காகப் பேசுவதற்கு பயப்படுவீர்கள். ஏனெனில், ‘மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்ற பயம்.

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தினாலும் நாம் அவர்களிடம் நல்லவிதமாகவே நடந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் அமைதியாக இருப்பீர்கள், உங்களுக்கு நீங்களே ஒரு High standard ஐ வைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களை Upset செய்யக்கூடாது என்று நினைப்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள 3 கலர்ஃபுல்லான இடங்களைப் பற்றித் தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Good girl syndrome

இதை மாற்றுவதற்கான முதல் படி Awareness. நமக்கு என்ன தேவை என்ற புரிதல் வேண்டும். நம்முடைய தேவைகளுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் ‘No’  சொல்வதில் தவறில்லை. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கான விதிகள் என்னவென்பதை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு வகுக்கும் விதிகளை உடைத்தெறியுங்கள். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். I’m Smart, kind, Intelligent என்று சொல்லுங்கள்.

எடுத்தவுடனேயே எந்த மாற்றமும் வந்துவிடாது. ஏனெனில், உங்களுக்குள் இருக்கும் அந்த பர்பெக்டான பெண்ணிற்கு இன்னும் அடுத்தவர்களின் ஒப்புதல் தேவைப்படும். இதை தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டு வரும்போது உங்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு நல்ல அழகான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com