இராணுவமே இல்லாமல் பாதுகாப்பாக வாழும் உலக நாடுகள் 6! எப்படி சாத்தியம்?

Military
Military
Published on

உலக நாடுகள் பெரும்பாலனவை தேசிய பாதுகாப்பிற்காக வலுவான இராணுவத்தை வைத்திருக்கின்றன. ஆனால் சில நாடுகள் தங்களுக்கு இராணுவம் என்ற அமைப்பு அவசியமில்லை என கருதி, அதை முற்றிலும் ரத்து செய்து தனித்துவமான பாதையில் பயணித்துள்ளன. இராணுவம் இல்லையென்றாலும், அவை தனிச்சிறப்பு கொண்ட பாதுகாப்பு முறைகள், போலீஸ் படைகள் மற்றும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து வருகின்றன.

1. ஐஸ்லாந்து (Iceland):

இங்கு இராணுவம் இல்லாததற்கு காரணம் வரலாறாக பெரிய போர்களில் ஈடுபடவில்லை. மக்கள் தொகை மிகக் குறைவு (சுமார் 3.5 லட்சம்) பெரிய இராணுவத்தை பராமரிப்பது செலவாகும். நாட்டின் பாதுகாப்பு தேவைகள் குறைவு.

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது: NATO உறுப்பினராக இருப்பதால் கூட்டணி நாடுகள் பாதுகாப்பின் பொறுப்பை பகிரும். அமெரிக்கா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கொண்டது. Icelandic Coast Guard கடல் பாதுகாப்பை கவனிக்கிறது. போலீஸ் மற்றும் சிறப்பு படைகள் உள்நாட்டுப் பாதுகாப்பு உண்டு.

2. கோஸ்டா ரிக்கா (Costa Rica):

இராணுவத்தை ரத்து செய்தது ஏனெனில், 1948 உள்நாட்டுப் போருக்குப் பிறகு இராணுவமே நாட்டை சேதப்படுத்தியது. மக்கள் நலனுக்காக கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பணத்தை செலவிட விரும்பியது. அமைதியான நாடாக உலகத்தில் முன்னுதாரணமாக இருக்க விரும்பியது

இதையும் படியுங்கள்:
கோயிலுக்குள் போகும் முன் செருப்பை கழற்றுவது ஏன்?
Military

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது:

  • பொது பாதுகாப்பு படை: இது போலீஸ் + சிறிய பாதுகாப்பு படைகள்.

  • எல்லை பாதுகாப்பு: போதைப்பொருள் கட்டுப்பாடு, கடற்பாதுகாப்பு போன்ற பணிகள் சிறப்பு படையால் கவனிக்கப்படுகிறது. சர்வதேச அமைதிக் கூட்டுறவு ஒப்பந்தங்கள் மூலம் கூடுதல் பாதுகாப்பு பெறுதல்.

3. லிச்செண்ஸ்டெய்ன் (Liechtenstein):

இராணுவத்தை ரத்து செய்ததற்கு காரணம் 1866–1868 காலத்தில் சுமைகள் அதிகம். இராணுவ செலவைச் சமாளிக்க முடியவில்லை. நாடு மிகச் சிறியது; பாதுகாப்பு தேவை குறைவு, புவிநிலை ரீதியாக நியூட்ரல் நாடாக இருக்க விரும்பியது.

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது: ஆயுதம் கையாளும் அதிகாரம் போலீசுக்கே. தேவையானால் ஸ்விட்சர்லாந்து பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் என்ற நட்பு ஒப்பந்தம்

இதையும் படியுங்கள்:
சென்னை கட்டட வரலாற்றின் சாதனை மனிதர்: யார் இந்த ‘நம்பெருமாள் செட்டியார்’...?
Military

4. ஆண்டோரா (Andorra):

இராணுவம் இல்லாததன் காரணம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்புக் கூட்டாண்மை காரணமாக தனி இராணுவம் தேவையில்லை

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது:

  • உள்நாட்டு பாதுகாப்பு: போலீஸ் & சிறப்பு பாதுகாப்பு பிரிவு,

  • தேசிய பாதுகாப்பு: பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை இணைந்து பொறுப்பேற்கும் வரலாற்றிலேயே இராணுவமற்ற நாடு

5. பனாமா (Panama):

இராணுவத்தை ரத்து செய்ததற்கு காரணம் 1990ல் படைத்தலைவர் நோரியாகா ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு இராணுவம் நாட்டை நிலைப்படுத்தியதாக கருதி ரத்து செய்தது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கம், போர்களில் ஈடுபடாத நாடாக உருவாக விரும்பியது

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது: Panama Public Forces (போலீஸ் + எல்லை பாதுகாப்பு + கடற்படை காவல்), பாதுகாப்பு ரீதியான ஒத்துழைப்பு: அமெரிக்கா போதைப்பொருள் எதிர்ப்பு & கடல் பாதுகாப்பில் சிறப்பு படைகள்

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்புச் சட்டம்! இதை டைப் செய்யவில்லை, கையால் எழுதினார்கள்!
Military

6. வத்திக்கான் நகரம் (Vatican City): இராணுவம் இல்லை ஏனெனில் உலகின் மிகச் சிறிய நகர-நாடு; போரில் ஈடுபடும் தேவை இல்லை. மதத் தலைவர் (Pope) மற்றும் நிர்வாகம் மட்டுமே. தேசிய-இராணுவம் தேவையில்லை.

பாதுகாப்பை எப்படிப் பேணுகிறது:

  • Swiss Guard – இது இராணுவம் அல்ல, பாதுகாப்பு/காவல் படை

  • Vatican Gendarmerie – உள்நாட்டு போலீஸ்

  • வெளிப்புற பாதுகாப்பு: இத்தாலி அரசாங்கம்

இந்த நாடுகள் இராணுவத்தை ரத்து செய்தது இரண்டு முக்கிய காரணங்களுக்காக:

படைத்துறை செலவு அதிகம், அமைதியான, நிலையான நாடாக உருவாக்க விரும்புதல். அவர்கள் பாதுகாப்பை போலீஸ், சிறப்பு பாதுகாப்புப் படைகள், மற்றும் பெரிய கூட்டணி நாடுகளின் ஒப்பந்த பாதுகாப்புகள் மூலம் உறுதி செய்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com