நம் இந்திய நாட்டில் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே சிற்பம், சித்திரம், பாட்டு, நடனம் போன்ற பல கலைகள் நன்கு செழித்தோங்கி வளர்ந்து மக்களின் மனங்களை கவர்ந்து மகிழ்வுறச் செய்து வந்துள்ளன. காற்றில் அசையும் புற்களிலிருந்து அமைதியான இரவின் நிலவொளி உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் விரல்வழி தூரிகை மூலம் சித்திரங்களாக சித்தரிப்பதில் வல்லவர்களாக விளங்கினர் நம் ஓவியர்கள். இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஆறு பெயிண்டிங்ஸ் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ரவி வர்மாவின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று துஷ்யந்தனின் காதலியான ஷாகுந்தலா. இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலையின் பெருமையை உலகளவிற்கு எடுத்துச் செல்ல உதவியது. கவி காளிதாஸனின் 'அபிஜ்னான சாகுந்தலம்' என்ற சமஸ்கிருத நாடகத்தில் வரும் ஒரு அற்புதமான காட்சியே இந்த ஓவியம். இதில் நாயகி சகுந்தலா வனத்தில் நடந்து செல்லும்போது, காலில் குத்திய முள்ளை பிடுங்குவதற்காக பின்னால் திரும்புவதுபோல் பாசாங்கு செய்து, அங்கு நிற்கும் காதலன் துஷ்யந்தன் மீது காதல் பார்வை வீசுவதுபோல் படம் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட தோழிகள் கேலி பேசி சிரிப்பதும் அதில் இடம்பெறும். அத்தனை உணர்ச்சிகளையும் தன் ஓவியத்தில் அருமையாக கொண்டு வந்திருப்பார் ரவி வர்மா.
மூன்று பெண்களைக் காட்டும் ஓவியம். காளிகட் (Kalighat) பெயிண்ட்டிங் ஸ்டைலில் பளிச்சென்று தோன்றும் அழகிய பெண்கள். கருப்பு மற்றும் அடர் புளு நிறத்தில் மெல்லிய கோடுகளால் டிசைன் போட்ட புடவை, முகத்தில் கண்டிப்பு, மூக்கில் நத்து (Nose ring) அணிந்து, கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட பெண்கள்.
அபநீந்திரநாத் இந்த ஓவியத்தில் ரபீந்திரநாத் தாகூர் ஒரு குருட்டுப் பாடகன் வேடத்தில் கையில் ஒரு ம்யூசிகல் வாத்தியத்தை வைத்துக் கொண்டு நடனம் ஆடுவதுபோல் வரைந்திருப்பார். அவருடைய கால்களின் தாளத்திற்கேற்ப உடை அசைய, கண்மூடி பரவச நிலையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆடுவது மிக அழகாக ஓவியத்தில் பிரதிபலிக்கச் செய்திருப்பார் ஓவியர். இவரது மற்ற படைப்புகளிலிருந்து இது வித்யாசமானது.
'ஒரு யானையின் நடை' என்ற அர்த்தம் தரும் இந்த ஓவியம் பெண்மையின் மென்மையையும் அழகையும் வியந்து போற்றும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதை வரைவதற்கு இவருக்கு உள்ளூக்கம் அளித்தது பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித். உயிர்த்துடிப்புள்ள நிறங்கள் கொண்ட பெயிண்ட்டை உபயோகித்து, கேன்வாசில் பிரஷ் நடனம் ஆடியது போல், பார்ப்போர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வரையப்பட்டுள்ளது இந்த ஓவியம்.
அதிக அழகும் கவர்ச்சியும் கொண்ட ஓவியம் 'பிந்து'. அதன் அழகு, நடுவில் வைக்கப்பட்டிருக்கும் புள்ளிகளுடன் இணைந்த, ஒத்த தன்மை கொண்ட உருவகங்களால் உண்டானது. பிந்து (dot), படைப்பு மற்றும் கூர் நோக்கும் தன்மையின் அடையாளமாகவும், வாழ்வின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. பிந்து ஓவியங்களைப் பார்ப்பவர்கள், அதிலிருந்து பார்வையை விலக்க முடியாமல், வசியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் நிற்பதே அதன் கம்பீரமான கவர்ச்சிக்கு அத்தாட்சி!
இது வெளியில் பலரால் அறியப்படாதது, ஆனால் பாராட்டுக்குரியது. பின் புறமிருந்து வரும் நிலவொளி முகத்தில் பட, தனியாக ஒரு பெண் அமர்ந்த நிலையில் பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்க, அந்தப் பார்வை ஓராயிரம் கதைகள் சொல்வதுபோல் இருக்கும். இந்த பெயிண்டிங்கில் உபயோகப்படுத்தப்பட்ட நிறங்கள் அடர் கருமை நிறம் கொண்டு, பெண்மையின் வசீகரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கும்.